நான் ராஜினாமா பண்ணிடுவேன்.. சீறிய அண்ணாமலை? உடனே குறுக்கிட்ட வானதி.. சொன்ன அந்த ஒரு வார்த்தை! போச்சே
பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சை கேட்டதும் அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள் வேண்டாம்.. வேண்டாம் என்று குறிப்பிட்டு பேசி உள்ளனராம்.
சென்னை: தமிழ்நாடு பாஜக கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய சில விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம். முக்கியமாக அண்ணாமலையின் பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அளித்த பதிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக இடையில் கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. அதிமுக பாஜக இடையிலான மோதல் அதிகரித்துள்ளதால் எங்கே இவர்கள் கூட்டணி முற்றாக முறிக்கிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் பாஜக நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவிற்கு தாவியதால் பாஜகவினர் கடுப்பில் உள்ளனர். அண்ணாமலை உள்ளிட்டோர் நேரடியாக அதிமுகவை விமர்சனம் செய்துள்ளனர்.

கூட்டணி
அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தன் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார். அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியும் இப்பவோ அப்பவோ என்று உள்ளது. இதனால் இவர்களின் கூட்டணி மொத்தமாக முறியும் சூழ்நிலையே உள்ளது. இந்த நிலையில்தான் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அதிமுக கூட்டணி குறித்து பேசி இருக்கிறாராம்.

என்ன சொன்னார்?
அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம்.

அமர் பிரசாத் ரெட்டி
இதை கேட்டதும் அமர் பிரசாத் ரெட்டி, கரு நாகராஜன் உள்ளிட்டோர் ஷாக் ஆகி உள்ளனர். அவர்கள் உடனே குறுக்கிட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சை கேட்டதும் அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள் வேண்டாம்.. வேண்டாம் என்று குறிப்பிட்டு பேசி உள்ளனராம். இப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று குறிப்பிட்டு உள்ளனர். பாஜகவில் அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கும் இன்னும் சில நிர்வாகிகளும் இதே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சிலர் அண்ணாமலையின் பேச்சு புரியவில்லை என்று விளக்கம் கேட்டு உள்ளனர்.

வானதி சீனிவாசன்
அப்போது குறுக்கிட்ட வானதி சீனிவாசன், இது பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தானே. கூட்டணி குறித்து ஆலோசனை செய்யும் கூட்டம் இல்லையே. நமது கட்சியில் கூட்டணி முடிவுகளை தேசிய தலைமை தானே முடிவு எடுக்கும். நமது கட்சி தேசிய கட்சி என்பதை மறக்க வேண்டாம், தேசிய தலைமை சொல்வதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டும். இந்த பிரச்னையை இங்கே பேச வேண்டியதே இல்லையே. அது இப்போது சப்ஜெக்ட் இல்லையே. மாநில கோர் கமிட்டி மையக் குழு கூட்டம் நடக்கும்போது தானே இதை பேச வேண்டும். ஏன் இப்போது பேசுகிறீர்கள் , என்று கூறி இருக்கிறாராம். இதனால் பாஜக கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications