ரெட்டிக்கிட்ட போன புகார்! திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை பின்னும் "வலை".. ஓ இவ்வளவு விஷயம் இருக்கா!
சென்னை: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சனுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர்கள் உள்துறை செயலாளரிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆளுநரிடம் புகார் கொடுத்தது மட்டுமின்றி, உள்துறை செயலாரிடமும் பாஜக புகார் கொடுத்ததற்கு பின் வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை இரு நாட்களுக்கு முன்பு சந்தித்தார் பாஜக அண்ணாமலை. தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிராக போலி பாஸ்போர்ட் விவகாரத்தை சில ஆதாரங்களுடன் புகாராக கொடுத்தார் அண்ணாமலை.
அதனை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார் கவர்னர்.

அண்ணாமலை
இதற்கிடையே, கவர்னரிடம் தந்ததுபோல, அதே புகார் மனுவை தமிழ்நாடு உள்துறைச் செயலாளரிடம் கொடுக்க வைத்துள்ளார் அண்ணாமலை. அதாவது, உள்துறை செயலாளரிடம் இந்த விவகாரத்தை புகாராக கொடுக்கவும் என்று கவர்னர் தரப்பில் சொல்லப்பட்ட அறிவுரையின்படி, பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன், செயலாளர் கராத்தே தியாகராஜன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கணகராஜ் ஆகிய மூவரையும் செக்ரட்டரியேட்டுக்கு அனுப்பி, உள்துறை செயலாளரிடம் புகார் கொடுக்க வைத்திருக்கிறார் அண்ணாமலை.

ஏன்?
உள்துறைச் செயலாளர் பனீந்தர்ரெட்டியிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்காமல் பாஜக நிர்வாகிகள் மூவரும் நேற்று தலைமைச்செயலகத்திற்கு சென்றுள்ளனர்,ஆனால், பனீந்தர்ரெட்டி கோட்டையில் இல்லை. அதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய அவர்கள் இன்றும் சென்றனர். பனீந்தர்ரெட்டி இருந்ததால் அவரை சந்தித்து போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த புகார் மனுவை கொடுத்தார் கரு.நாகராஜன். புகாரை வாங்கிக்கொண்ட பணீந்தர், ஓகே என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.

என்ன சொன்னார்?
நடவடிக்கை எடுப்பதாகவோ, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவோ எந்த உறுதியையும் அவர் தரவில்லை. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக கரு.நாகராஜன், தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுப்பதாக உள்துறைசெயலாளர் சொல்லவில்லை என்கிறது கோட்டை வட்டாரம். போலி பாஸ்போர்ட் விவகாரம், தேசத்துரோகம் தொடர்பானது.
Recommended Video

வழக்கு போட பிளான்?
அந்த விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஸ்டாலின் நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தவே உள்துறை செயலாளரிடம் புகார் கொடுக்கப்பட்டதாம். ஏனெனில், ஆளுநரிடம் கொடுக்கப்படும் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியாது. அதனாலேயே.. உள்துறை செயலாளரிடம் புகார் கொடுங்க.. அப்போது வழக்கு போட ஈசியாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசிடம் பாஜக புகார் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications