பிளானை மாற்றியது ஏன்? முன்கூட்டியே கிளம்பி சென்ற அண்ணாமலை.. பாஜகவில் எழுந்த குழப்பம்.. ஆஹா!
சென்னை: பாஜகவில் உறுப்பினர்கள் புதுப்பிப்பு, புதியவர்கள் சேர்ப்பு ஆகிய பணிகளை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது. புதுப்பிப்பதில் முதல் நபராக பிரதமர் மோடி தனது உறுப்பினரை புதுப்பிக்கிறார். அவரது உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டதும் தமிழக பாஜகவில் தொடங்கவிருக்கிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வியை கற்பதற்காக லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகளிடம், உறுப்பினர் சேர்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் ; 1 கோடி உறுப்பினர்கள் நம் இலக்கு ; ஏற்கனவே நம்மிடம் 50 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 50 லட்சம் பேரை புதிதாக சேர்க்க வேண்டும்.

1 கோடி இலக்கை அடைந்துவிட்டால் 2026 தேர்தலில் நாம் நினைப்பது சாத்தியமாகும் என்று நம்பிக்கையாக பேசியிருக்கிறார் அண்ணாமலை. இதற்கிடையே, அண்ணாமலை லண்டனுக்கு செல்வது செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது முன்னதாகவே லண்டன் கிளம்பிச் சென்றிருப்பது ஏன்? என்கிற கேள்வி தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகளிடம் எதிரொலிக்கச் செய்துகொண்டிருக்கிறது.
லண்டன் பயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு படிக்க சென்றுள்ளார். அவர் லண்டன் சென்றுள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்தோ.. இல்லை லண்டனில் அண்ணாமலை இருக்கும் புகைப்படங்களோ வெளியே வரவில்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வர தொடங்கி உள்ளன. பல்வேறு அரசியல் நிபுணர்கள் இது தொடர்பாக இணையத்தில் தகவல்களை வெளியிட தொடங்கி உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று உள்ளார். லண்டனில் அவர் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றார். எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக லண்டன் சென்றார்.
அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று யாரும் புகைப்படங்களை வெளியிடவில்லை. பாஜக அதிகாரபூர்வ பக்கமோ, அண்ணாமலையே, இந்த பயணம் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை. சர்வதேச அரசியல் என்ற படிப்பை படிக்க அண்ணாமலை சென்றுள்ளார். அது சான்றிதழ் படிப்பு. சில மாதங்கள் அங்கு தங்கி படிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை ஆக்ஸ்போர்ட் அழைப்பது வழக்கம். அப்படி அண்ணாமலைக்கு இந்த முறை தேர்வாகி உள்ளார். இதற்காக அங்கே செல்லவும் அண்ணாமலை 4-5 மாதங்கள் அங்கேயே இருக்க உள்ளார்.
தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அண்ணாமலை நேற்று முதல்நாள் வெளிநாடு செல்லும் முன்பும் கூட அதிமுகவை கடுமையாக தாக்கிவிட்டே சென்றார்.
எடப்பாடி குறித்து நான் விமர்சனம் வைத்ததில் தவறு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். நான் என்னுடைய ஸ்டைலில் பேசினேன். நான் என்னுடைய ஸ்டைலில் விமர்சனம் வைத்தேன். இதில் எந்த தவறும் இல்லை. பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரி. நான் அவரை தற்குறி என்று கூறியதில் தவறு இல்லை.
முன்னாள் அமைச்சர்கள் என்னை தற்குறி என்று கூறலாம். நான் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா? என்று போகிற போக்கில் அண்ணாமலை கேட்டுவிட்டு சென்றுள்ளார்.
தலைவர் பதவி: இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம்.. அவர் வெளிநாட்டில் இருக்கும் வரை தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வருகின்றன. அவர் தலைவர் பதவியில் இருந்தே கூட மாற்றப்படலாம் என்றும் செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது தலைமை பதவி மாற்றம் தொடர்பான கேள்விக்கு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார்.
அதில்,.. பாஜகவில் அனைத்திற்கும் முறை இருக்கிறது. அண்ணா இன்னும் டைம் இருக்கு.. நான் ஒரு அடிப்படை தொண்டன்.. அதன்படியே செயல்படுவேன். கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே நாங்கள் செயல்படுகிறோம். அதற்காகவே .. அதை நோக்கியே செல்கிறோம், என்று அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications