பணம் செலுத்தினால் மதுபானம் தரும் மெஷின் கொண்டு வந்தது ஏன்? டாஸ்மாக் நூதன விளக்கம்
சென்னை: சென்னையில் கோயம்பேடு உள்பட 4 இடங்களில் பணம் செலுத்தினால் மதுபானம் தரும் இயந்திரம் அமைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து டாஸ்மாக் நிறுவனம் நூதன விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 3 இல் ஒரு பங்கு வருவாய் மதுவிற்பனை மூலம் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் கோடி அளவிற்கு இந்த முறை மதுவால் வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் மது விற்பனையை இதுவரை கடைகளில் மட்டுமே செய்துவரும் டாஸ்மாக் நிர்வாகம், முதல்முறையாக சென்னையில் மதுபானத்திற்கென பிரத்யேக ஏடிஎம்மை சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் மால் உள்பட சென்னையில் 4 எலைட் மதுபானக் கடைகளில் சோதனை அடிப்படையில் மதுபான ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த மதுபான ஏடிஎம்மில் பல்வேறு மதுபான பாட்டில்கள் வரிசையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பீர், பிராந்தி, டின் பீர் என எந்த வகையான மது வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளலாம். அதற்கான ஆப்சன் ஸ்கீரினில் கொடுக்கப்பட்டுள்ளது.
குடிமகன்கள் தங்களுக்கு வேண்டிய மதுபானத்தை ஸ்கீரினில் இருக்கும் அதற்கான ஆப்ஷனில் டச் மூலம் கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு பணம் அல்லது கார்டு வசதியை தேர்வு செய்து பணம் செலுத்தினால் போதும். அடுத்த சில வினாடிகளில் அந்த இயந்திரத்தில் இருந்து விரும்பிய மதுபானம் தானாகவே வெளியே வரும். அதனை குடிமகன்கள் எடுத்து செல்லலாம்.

மதுவிற்பனையை தானியாங்கி மிஷின் மூலம் டாஸ்மாக் நிறுவனம் செய்வது ஏன் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அண்மையில் தான் திருமண அரங்கில் மதுபானங்கள் வழங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தற்போது மதுபானத்தை விற்க ஏடிஎம் அமைத்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள டாஸ்மாக் நிறுவனம், "சென்னையில் சோதனை அடிப்டையில் 4 எலைட் மதுபான கடைகளில் பணம் செலுத்தினால் மதுபானம் தரும் இயந்திர அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகரையடுத்து மதுபானம் தரும் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படுவார்கள்" என டாஸ்மாக் விளக்கம் அளித்துள்ளது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications