சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விழுப்புரத்தில் தோல்வி அடைந்த சிவி சண்முகம்.. தப்புக் கணக்கு போட்டதால் வந்த வினை.. பரபரப்பு தகவல்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டத் துறை அமைச்சராக இருந்த சிவி சண்முகம் விழுப்புரம் படுதோல்வியை சந்தித்ததன் பின்னணி என்ன?

ஜெயலலிதா இருந்த போது பல்வேறு புகார்களின் அடிப்படையில் சிவ சண்முகத்தின் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தார்.

சட்டத் துறை என்ற முக்கிய இலாகாவை கையில் வைத்திருந்த சிவி சண்முகம் கடந்த 2011 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் 12,097 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

தமிழகத்தில் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்.. ஜெயக்குமார் முதல் பூங்கோதை வரைதமிழகத்தில் சொந்த தொகுதிகளிலேயே தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள்.. ஜெயக்குமார் முதல் பூங்கோதை வரை

வாக்குகள் வித்தியாசம்

வாக்குகள் வித்தியாசம்

தொடர்ந்து 2016இல் சட்டசபைத் தேர்தலில் சட்டத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது 3ஆவது முறை அதே தொகுதியில் போட்டியிட்ட சிவி சண்முகம் திமுக வேட்பாளரிடம் 14,867 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டார்.

அதிருப்தி

அதிருப்தி

அதிமுகவின் மூத்த, முக்கிய தலைவர்களில் ஒருவர் சிவி சண்முகம். இவரது பதவி பறிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. இரு முறை விழுப்புரத்தில் வெற்றி பெற்றும் மாவட்டத்தில் சட்டக் கல்லூரியை கொண்டு வந்ததை தவிர வேறு எந்த நலனையும் செய்யாததால் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

பாமக

பாமக

விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் இருந்த போதும் அமைச்சராக இருந்த இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். மேலும் இவர் ஒரு தப்புக் கணக்கும் போட்டுவிட்டார் என்கிறார்கள். அதாவது 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு 37 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன.

வன்னியர்கள்

வன்னியர்கள்

தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் வன்னியர்கள் வாக்குகள் அனைத்தும் தமக்கு கிடைத்துவிடும் என நம்பியிருந்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. மேலும் கட்சி நிர்வாகிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே இவர் தோற்க அவரது சொந்த கட்சி நிர்வாகிகளும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

English summary
Why did C.Ve.Shanmugam lose in Tamilnadu assembly election 2021?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X