முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ.. ஹாஸ்டல் ரூமில் சின்சியர் காதலன்! சென்னையில் சைலண்ட் காதலி
சென்னை: இளம்வயது தற்கொலைகளும், கொலைகளும், இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.. என்ன செய்வது என்று தெரியாமலும், யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளவும் முடியாத நிலையில் இளைஞர்களின் மரணங்கள் எண்ணிக்கை பெருகி வருவதாக மனநல மருத்துவர்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.. பயம், முதிர்ச்சியின்மை, புரிதலின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இதுபோன்ற இளம் மரணங்களுக்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன. இதுபோன்றவர்களுக்கு, ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும் தேவையாக உள்ளது.. இந்நிலையில், காதலி தன்னிடம் பேசவில்லை என்பதற்காக, கொலையும், தற்கொலையும் நேற்று ஒரேநாளில் நடந்துள்ளது.
சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 19 வயதாகிறது.. இவர் யுவராஜ் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், சமீப காலமாகவே யுவராஜிடம் பேசுவதை இளம்பெண் நிறுத்தியிருக்கிறார்.. இதனால் நேற்யை தினம், காதலியை வழிமறித்த யுவராஜ், தன்னிடம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டுள்ளார்.
உயிருக்குயிரான காதலர்கள்
அப்போது காதலர்கள் இருவருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த யுவராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், காதலியின் தலையில் ஓங்கி குத்தினார்.. இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார் இளம்பெண்.. இதையடுத்து நேற்று யுவராஜை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
ஆனால், கேரள மாநிலத்தில் காதலி தன்னுடன் பேசாததால் இளைஞர் தற்கொலையே செய்து கொண்டுள்ளார்.. வயநாடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபீர் (வயது 26). இவர் கர்நாடக மாநிலம் பெரேசந்திரா கிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இதற்காக அந்த கல்லூரியின் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்து படித்து வருகிறார்..
ரூம் கதவை திறக்கவில்லை
இந்த நிலையில் நேற்று காலை ஷபீரின் ரூம் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.. இதனால் சந்தேகம் அடைந்த சக நண்பர்கள், கதவை தட்டியிருக்கிறார்கள்.. ஆனால் ஷபீர் கதவை திறக்கவேயில்லை.
எனவே ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, முகமது ஷபீர் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அலறினார்கள்.. உடனடியாக வார்டனுக்கு தகவல் தந்தனர்.. பிறகு போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது.. ஹாஸ்டலுக்கு வந்த போலீசார், ரூம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
முதலும் நீதான் முடிவும் நீதான்
பிணமாக தொங்கிக் கொண்டிருந்த ஷபீரின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு ஷபீரின் ரூமை சோதனை செய்தார்கள்.. அப்போது தற்கொலைக்கு முன்பு, ஷபீர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், "நான் எதையும் நிறுத்தவில்லை. நான் என்றென்றும் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய முதலும் நீதான், முடிவும் நீதான்" என்று உருக்கமாக எழுதி இருந்தார். அப்போதுதான், காதல் தோல்வியால் ஷபீர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் போலீசார் விசாரணையை துரிதமாக்கினார்கள்.. முகமது ஷபீர் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை மிக தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாகவே ஷபீருடன், காதலி சரியாக பேசுவதில்லையாம். போன் செய்தாலும், அதை தவிர்த்து வந்துள்ளார்.
மனம் நொந்த காதலன்
இதுகுறித்து காதலியிடம் நேரடியாகவே கேட்டுள்ளார்.. ஆனால் எந்த பதிலும் அந்த பெண் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்து முகமது ஷபீர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் உறுதியாகியிருக்கிறது.. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலி பேசாததால், அக்காதலியையே காதலன் சென்னையில் கொலை செய்ததும், காதலி பேசாததால் மனமுடைந்து காதலனே கர்நாடகாவில் தற்கொலை செய்து கொண்டதும், நேற்று ஒரே நாளில் நடந்து, 2 சம்பவங்கள் நடந்து பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications