சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெட்ரூமில் இரவெல்லாம் அழுத ஸ்ரீமதி.. அதுவும் அந்த ஹவுஸ் ஓனர்.. போனில் யாரந்த போலீஸ் ஆபீசர்?.. கொடுமை

இளம்பெண் ஹவுஸ் ஓனர் சொன்ன பொய்யால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: ஹவுஸ் ஓனர் சொன்ன ஒரே ஒரு பொய், ஸ்ரீமதியின் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டது.. என்ன நடந்தது ஸ்ரீமதிக்கு?

திருவேற்காடு கருமாரியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார்.. இவரது மனைவி உமா.. இவர்களுக்கு 19 வயதில் ஸ்ரீமதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சென்னையில் தனியார் காலேஜில் ஸ்ரீமதி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.. இவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.

வெண்பாவின் ப்ளான், டிஎன்ஏ டெஸ்ட்டில் மீண்டும் மாற்றம்!பாரதி எடுத்த முடிவு,இப்படி முடிச்சிட்டாங்களே! வெண்பாவின் ப்ளான், டிஎன்ஏ டெஸ்ட்டில் மீண்டும் மாற்றம்!பாரதி எடுத்த முடிவு,இப்படி முடிச்சிட்டாங்களே!

ரூமில் ஸ்ரீமதி

ரூமில் ஸ்ரீமதி

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் எழுந்த உமா, தூங்கி கொண்டிருந்த தன் மகளை எழுப்ப ரூமுக்குள் சென்றுள்ளார்.. அப்போது ஸ்ரீமதி சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அலறியுள்ளார்.. மகளை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுதார்.. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவேற்காடு போலீசார் விரைந்து வந்தனர்.. ஸ்ரீமதியின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

கண்ணீர் கதறல்

கண்ணீர் கதறல்

ஸ்ரீமதி ஏதாவது தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருக்கிறாரா என்று அந்த ரூமில் ஆய்வு செய்தனர்.. எதுவுமே கிடைக்கவில்லை. அதனால், ஸ்ரீமதியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்... விசாரணையில் அவர்கள், தங்களின் மகளின் தற்கொலைக்கு நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் ஓனர்தான் காரணம் என்றார்கள்.. திருவேற்காடு சிவசங்கர் நகர் பகுதியில் வினோத் ரேவதி தம்பதியினரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்களாம்..

5 + 7 பவுன்ஸ்

5 + 7 பவுன்ஸ்

அப்போது குடும்ப வறுமை காரணமாக, ரேவதியிடம் இருந்து 2 பவுன் தங்க நகை வாங்கி அடகு வைத்திருக்கிறார் உமா. ஆனால், அதற்கு பிறகு, அங்கிருந்து வேறு ஒரு வீட்டிற்கு மாறி வந்துவிட்டார்கள். இந்நிலையில், ரேவதியின் கணவர் வினோத், 7 சவரன் நகை வாங்கி அடகு வைத்து விட்டீர்கள், அதனை உடனடியாக திருப்பி தந்துவிடுங்கள் என்று உமா வீட்டிற்கு வந்து தகராறு செய்திருக்கிறார்.. இதை கேட்டு உமா, ஸ்ரீமதி உட்பட எல்லாருமே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. நாங்கள் 2 சவரன் மட்டும்தானே நகை வாங்கினோம்? 7 சவரன் நகை வாங்கவே இல்லையே? என்று கூறியுள்ளார்..

கப்பலேறிய மானம்

கப்பலேறிய மானம்

ஆனாலும், அந்த ஹவுஸ் ஓனர் அதை காதிலேயே வாங்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல், திருவேற்காடு போலீசுக்கு சென்று புகாரும் தந்துவிட்டார்.. இந்த புகாரின் பேரில், உமா குடும்பத்தில் அனைவரையும் ஸ்டேஷன் அழைத்து போலீசார் விசாரித்திருக்கிறார்கள்.. இதனால் கடந்த சில நாட்களாகவே ஸ்ரீமதி, அவமானத்திலும், மன உளைச்சலிலும் இருந்து வந்தாராம்.. தற்கொலை செய்துக்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக, யாரோ ஒரு போலீஸ்காரரிடமும் ஸ்ரீமதி போனில் நீண்ட நேரம் பேசினாராம்..

பச்சை பொய்

பச்சை பொய்

நாங்கள் 2 பவுன்தான் நகையை கடனாக வாங்கினோம், அந்த ஹவுஸ் ஓனர் பொய் சொல்கிறார்.. என்று தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கமாக சொன்னாராம்.. போனில் மகள் பேசுவதை உமா கவனித்துள்ளார்.. அதற்கு பிறகுதான், ரூமுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, தங்கள் மகள் செல்போனில் பேசிய போலீஸ் அதிகாரி யாரென்று விசாரிக்க வேண்டும் என்றும், தற்கொலை காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீமதியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரூமில்.. தூக்கில்

ரூமில்.. தூக்கில்

இதனைதொடர்ந்து ஸ்ரீமதியின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்... ஒரு பொய்யை ஜீரணிக்க முடியாமல், அதை நிரூபிக்கவும் வழியில்லாமல், தேவையில்லாத அவமானத்திலும் கூனிக்குறுகி, இரவெல்லாம் அழுது தவித்து, கடைசியில் தூக்கிலும் தொங்கிவிட்டார் அப்பாவி ஸ்ரீமதி.. அந்த போலீஸ் அதிகாரி, ஸ்ரீமதியிடம் போனில் அப்படி என்ன சொல்லி இருப்பார்??

English summary
Why did Chennai Student commits suicide and what did house owner say actually
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X