வரலாற்றை மாற்றுமா சென்னை சூப்பர் கிங்ஸ் ? குஜராத் அணியுடன் தொடரும் இப்படி ஒரு சோகம் ?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருமுறை கூட இதுவரை குஜராத் அணியை வென்றது இல்லை. இதுவரை ஆடிய அத்தனை போட்டியிலும் தோல்வியை மட்டுமே தழுவி உள்ளது. சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்று வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டே தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த மூன்று ஆட்டத்திலும் குஜராத் அணியே வென்றுள்ளது. கடைசியாக அஹமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி 14 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 8 வெற்றி ஒரு டிரா மற்றும் 5 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இதன் காரணமாக குவாலிபையர் சுற்றில் சென்னை அணியும் குஜராத் அணியும் இன்று மோதுகின்றன. இதுவரை நடந்த குஜராத் உடன் நடந்த 3ஆட்டத்திலுமே சென்னை அணி தோல்வியை மட்டுமே சந்தித்தது. இன்றைய போட்டியில் வென்றால், வரலாற்றை சிஎஸ்கே திருத்தி எழுதும். மாறாக தோற்றால், சென்னை அணியின் சோகம் தொடருவதுடன், மீண்டும் லக்னோ அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி வென்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு போக முடியும் என்ற நிலை ஏற்படும். இந்த போட்டியில் வென்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்னை அணி சென்றுவிடும்.

ஹர்த்திக் பாண்டே தலைமையிலான குஜராத், இருக்கும் ஐபிஎல் அணிகளிலேேயே மிகவும் வலுவான அணியாக உள்ளது. அந்த அணி அந்த காலத்து ஆஸ்திரேலியா போல் உள்ளது. யாராவது ஒருவர் கண்டிப்பாக நின்று ஜெயிக்க வைத்துவிடுகிறார்கள். மிகவும் வலுவான அணியான குஜராத் அணியை சென்னை அணி இன்று வென்றால், உண்மையிலேயே மஞ்சள் படை தோனியை கொண்டாடும். இன்றைய போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் போட்டி நடப்பது, சென்னை அணிக்கு கூடுதல் பலம் ஆகும். சென்னை அணி இதுவரை சேப்பாக்கத்தில் விளையாடிய 63 போட்டியில் 44 முறை வென்றுள்ளது. 19 முறை தோற்றுள்ளது. வெற்றி சதவீதம் என்பது சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு 69.84 சதவீதம் ஆகும். கடைசியாக இங்கு நடந்த ஐந்து போட்டியில் 3 இல் வெற்றி பெற்றுள்ளது. இரண்டில் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி கடைசியாக கொல்கத்தா அணியுடன் இங்கு விளையாடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இன்று குஜராத் அணியை வென்று இறுதிபோட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications