மோடியை வரவேற்க எப்போதும் செல்லும் ஸ்டாலின்.. இந்த முறை செல்லாதது ஏன்? அடடா இப்படி ஒரு காரணமா?
சென்னை: நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்திற்கு செல்லவில்லை. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும்நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் மீண்டும் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக தேர்தல் காலங்களில் இப்படி பல்வேறு பொதுத்திட்டங்களை தொடங்கி வைக்க மோடி பயணம் மேற்கொள்வது வழக்கம்

அதேபோல் இந்த முறையும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டம் மற்றும் சில பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடுவந்தார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வருகிறார். .
நேற்று வருகை; பிற்பகல் 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை வரும் மோடி பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டார். மோடியை அமைச்சர் காந்தி, மேயர் ப்ரியா, பாஜக அண்ணாமலை , எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
மோடி ஸ்டாலின் - எப்போது மோடி தமிழ்நாடு வந்தாலும் அவரை வரவேற்க ஸ்டாலின் விமான நிலையம் செல்வார். என்னதான் மோதல் இருந்தாலும்.. சண்டை இருந்தாலும் ஸ்டாலின் பிரதமருக்கான இந்த மரியாதையை கொடுப்பார்.
ஆனால் நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்திற்கு செல்லவில்லை. இதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் கருத்து வேறுபாடு இல்லை. மாறாக.. மோடி வருவது அரசு நிகழ்ச்சி மட்டும் அல்ல. அது பாஜக பொதுக்கூட்டமும் கூட. அப்படி இருக்க பிரச்சாரத்திற்கு வருபவரை ஸ்டாலின் அழைத்தால் சரியாக இருக்காது. அது கட்சி அரசியல்.. பொது நிகழ்வு இல்லை. இதன் காரணமாக ஸ்டாலின் மோடியை அழைக்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இது லோக்சபா தேர்தல் காலம்.. அப்படிப்பட்ட நேரத்தில் எந்த ஒரு சந்திப்பும் கூட்டணி ரீதியான பேச்சுவார்த்தையோ அல்லது அரசியல் வியூகமோ என்றெல்லாம் விவாதிக்கப்படும். அதை கருத்தில் கொண்டே மோடியை ஸ்டாலின் தவிர்த்து இருக்கிறார் என்கிறார்கள்.
மோடி பேச்சு: நேற்று நிகழ்வில் பேசிய மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் உறுதியாக இருக்கிறேன். உலகின் 3 சிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக நாடு உருவாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியம்.
சென்னையில் ரூ1,000 கோடிக்கான நகர்ப்புற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ, விமான நிலைய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது., மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு இடையூறாக உள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு பணியாற்றுகிறது. சென்னைவாசிகளின் தேவைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு. சென்னையை புயல் தாக்கிய போது பெரும் துயரம் ஏற்பட்டது. சென்னை புயலால் பாதிக்கப்பட்ட போது திமுக அரசு உதவவில்லை.
சென்னை புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை அதிகரித்துவிட்டது. திமுக அரசு வெள்ள தடுப்பு மேலாண்மையை மேற்கொள்ளவில்லை. திமுக அரசு ஊடகங்களை சரி செய்து வெள்ள நீர் வடிந்துவிட்டதாக பிரசாரம் செய்தது.மக்களின் துயரம் பற்றி திமுக அரசுக்கு அக்கறையும் கவலையும் இல்லை.
தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் திமுக அரசுக்கு அக்கறையே இல்லை என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications