முஷ்டி முறுக்கிய ஸ்டாலின்.. நேஷனல் அளவில் மெகா பிளான்.. ஆளுநர் பற்றி இரவோடு இரவாக பறந்த லெட்டர்! ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தாக்கல் செய்தார். பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு இதே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலினால் இரண்டு நாட்களுக்கு முன் தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இந்த தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்

 Why did CM Stalin send a letter against Governors to non BJP ruled states and What is the plan?

சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.

சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

 Why did CM Stalin send a letter against Governors to non BJP ruled states and What is the plan?

சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

முக்கியமாக ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெற்றிபெற்ற தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அன்று மாலையே ஆளுநர் ஆர். என் ரவி ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு உடனே ஒப்புதல் அளித்தார். தற்போது இந்த தடை சட்ட மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாகிவிட்டது.

இதன் மூலன் ஆன்லைனில் ரம்மி விளையாடினால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது சிறை மற்றும் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தற்போது பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கு இதே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்கள் ஆளுநர் மீது கடுப்பில் உள்ள நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளார்.

ஸ்டாலினின் இந்த கடிதத்திற்கு பின் முக்கியமாக சில காரணங்களும் இருக்கிறதாம்..

 Why did CM Stalin send a letter against Governors to non BJP ruled states and What is the plan?

காரணம்: ஆளுநர் உடன் மோதல் என்பதை தாண்டி உண்மையில் ஆளுநர் பதவியை தேசிய அளவில் நீக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம். தற்போது பாஜக ஆளாத மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் ஆளுநருக்கும் - அரசுக்கும் கடும் மோதல் உள்ளது.

தெலுங்கானாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் கே சந்திரசேகர ராவ் வழக்கு போடும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டு உள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் நிறைவேற்றிய தீர்மானம் உடனே வென்ற நிலையில், ஆளுநரும் ரம்மி நீக்க மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.

அதேபோல் மற்ற மாநிலங்களிலும் ஆளுநரை வழிக்கு கொண்டு வர, பின்னர் தேசிய அளவில் ஆளுநரை எதிர்க்க வசதியாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி உள்ளாராம். எல்லா மாநிலங்களிலும் அல்லது பெரும்பாலான மாநிலங்களில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை வைத்து சட்ட போராட்டம் நடத்தலாம் என்றும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+