"கொங்கில்" நடக்கும் ட்விஸ்ட் .. திடீரென செந்தில் பாலாஜி பற்றி பேசிய ஸ்டாலின்.. ஏன்? ஆடிப்போன அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து திடீரென பேசுவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்காக மிக வேகமாக திமுக தயாராகி வருகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு திமுக களப்பணிகளை செய்ய தொடங்கிவிட்டது. பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

Why did CM Stalin talk about Senthil Balaji all of a sudden in Erode Kongu Region

இந்த லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் அங்கே திமுக எப்படி பணிகளை செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் வேலை: அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் திமுகவை ஜெயிக்க வைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறாராம்.

அதன்படி தன்னை சந்தித்த சிலர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான தகவல் ஒன்றை அனுப்பி உள்ளாராம் செந்தில் பாலாஜி. அதில்.. கோவையில் நாம்தான் ஜெயிக்க வேண்டும். கோவையில் இந்த முறை திமுகவே நிற்கட்டும். இப்போது கூட்டணி கட்சியிடம் உள்ள இடம் திமுகவிற்கு வந்தால் நாம் ஜெயிக்கலாம்.

தேர்தல் பணிகளை எனக்கு நெருக்கமானவர்கள் பார்த்துக்கொள்வார்கள். திமுகவில் சரியாக இருக்கும் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு செந்தில் பாலாஜி தலைமைக்கு தகவல் அனுப்பி உள்ளாராம். கொங்கு அரசியலை கரைத்து குடித்தவர் என்பதால் செந்தில் பாலாஜியின் ஆலோசனைகளை திமுக பரிசீலனை செய்து வருகிறதாம்.

அவர் அப்படி சொன்னதன் அடிப்படையிலே கோவையில் இந்த முறை கூட்டணி கட்சியை களமிறக்காமல் திமுக வேட்பாளரை களமிறக்கி உள்ளனராம்.

கோவை தொகுதி: கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜிதான் இங்கே கணபதியை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர்.

இது போக கரூரிலும் திமுக வேட்பாளரை இந்த முறை நிறுத்த வேண்டும் என்று செந்தில் பாலாஜி கேட்டு இருக்கிறார். ஆனால் ஜோதிமணி காங்கிரஸ் தயவில் இங்கே நிற்க வாய்ப்பை பெற்றுவிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் செந்தில் பாலாஜி ஆட்கள்.. திமுக வேட்பாளர் நிற்கவில்லை என்பதால் சுணக்கம் அடைந்துள்ளனர். ஆனால் செந்தில் பாலாஜியோ நான் இல்லை என்றாலும்.. அங்கே யார் நின்றாலும் நம்ம கூட்டணிதான் வெல்ல வேண்டும் என்று கூறி கோவையிலும், கரூரிலும் கூடுதல் ஆட்களை இறக்கி பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறாராம்.

எப்போதும் இறங்குவதை விட 3 மடங்கு ஆட்களை இறக்கி கிரவுண்டு வேலைகளை செய்து வருகிறாராம். இதையடுத்து நேற்று முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜி பற்றி பேசி இருக்கிறார்.

ஈரோட்டில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சின் தொடக்கத்திலேயே, மேடையில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் பெயர்களை குறிப்பிட்டு வரவேற்ற ஸ்டாலின், இந்தக் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியோடும் - சிறப்போடும் ஏற்பாடு செய்துள்ள ஆற்றல்மிகு ஈரோட்டுச் செயல்வீரர் முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், முக்கியமாக இங்கு வரவில்லை என்றாலும், தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களைப் பெற்றிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், என்னுடைய நன்றியும்!
மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள். பாஜகவின் அத்தனை சதிச் செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+