நொடிக்கு நொடி எகிறிய பிரஷர்.. பதறிய திமுக.. இரவில் சட்டென முடிவெடுத்த காங்கிரஸ்.. என்ன நடந்தது?
சென்னை: நேற்று இரவோடு இரவாக காங்கிரஸ் திடீரென வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கிறது.
தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று காங்கிரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் தனி தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டி. கிருஷ்ணகிரி தொகுதியில் கே கோபிநாத் வேட்பாளராக அறிவிப்பு. கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கி உள்ளது.
கடலூர் தொகுதியில் டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம் எம்பி வேட்பாளராக அறிவிப்பு. விருதுநகரில் மீண்டும் மாணிக்கம் தாகூர் எம்பிக்கு காங்கிரஸ் வாய்ப்பு.
கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இரவோடு இரவாக அறிவிப்பு; நேற்று இரவோடு இரவாக காங்கிரஸ் திடீரென வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஓ பன்னீர்செல்வம் கூட தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சி நேற்று வரை அறிவிக்காமல் இருந்தது. இது திமுக தரப்பிற்கு பிரஷரை அதிகரித்தது. காரணம் திமுக அமைச்சர்கள், முதல்வர் தொகுதி வாரியாக பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டனர்.,
வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். அப்படி இருக்க காங்கிரஸ் தொகுதிகளில் கூட கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர். ஆனால் காங்கிரஸ் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
இது திமுகவிற்கு பிரஷரை அதிகப்படுத்தியது. அதோடு கூட்டணி வேகமாக அறிவித்தால்தான் பிரச்சாரம் செய்ய முடியும். பாஜக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. ஆனால் காங்கிரஸ் மட்டும் உட்கட்சி மோதல் காரணமாக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் திமுக தந்த பிரஷர், தொண்டர்கள் கேட்ட கேள்வி என்று பல காரணங்கள் காரணமாக நேற்று இரவோடு இரவாக காங்கிரஸ் திடீரென வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கோஷ்டி மோதல்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடும் நிலையில் 7 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதிகளுக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே கோஷ்டி மோதல் இருப்பதாகவும், இங்கே நிறுத்தப்படும் வேட்பாளர்களை திமுக விரும்பவில்லை என்றும் கூட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று இந்த தொகுதிகளுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
போட்டியிடும் தொகுதிகள் விவரம்: திமுக - 21 ( வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்பத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளகுறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பூர், தஞ்சாவூர், தேனி , தூத்துக்குடி, தென்காசி, )
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி (தமிழ்நாட்டில் திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர்,, கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறையில் காங்கிரஸ் போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது)
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2 (நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது)
சிபிஎம் - 2 ( மதுரை, திண்டுக்கல்)
மதிமுக -1 (திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது)
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications