போய் ஜூஸ் பாட்டில தூக்குங்க! சிஎஸ்கே வீரருக்கு அவமானம்.. தங்கம் சார் அவரு.. அவருக்கு போய் இப்படியா?
சென்னை: சிஎஸ்கே வீரர் ஒருவருக்கு நேர்ந்த அவமானம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணி 2023 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்க தொடங்கி உள்ளது. குஜராத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அதற்கு அடுத்து ஆடிய லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றது.
அதன்பின் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் பின்னர் பெங்களூர், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக வென்றது.

இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சிஎஸ்கே வீரர் மிட்சல் சான்ட்னர் சிறப்பாக ஆடினார். மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்ட்னர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்ட்னர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.
ரஹானே 27 பந்தில் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என்று மொத்தம் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சான்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில்தான் மிட்சல் சான்ட்னருக்கு நேர்ந்த அவமானம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. மிட்சல் சான்ட்னர் கடந்த போட்டியில் ஆடவில்லை. அப்போது போட்டிக்கு இடையில் அவரை பேட்டி எடுத்த சைமன் டுயோல்.. அவரை கடுமையாக கிண்டல் செய்தார். உங்களுக்கு வாழ்த்துக்கள்.. நீங்கள் போய் கூல்ட்ரிங் பாட்டில் தூக்கவும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.
சிஎஸ்கே அணியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்படுவதை சுட்டிக்காட்டி இப்படி கிண்டல் செய்தார்.
இவர் 2018ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வருகிறார். ஆனால் இவர் 15 வெறும் போட்டிகளில் மட்டும் ஆடும் லெவனில் ஆடி உள்ளார்.
சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டதில் இருந்தே இவருக்கு அணியில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது இல்லை. எப்படியாவது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும். அணியில் இவர் இருப்பதே சந்தேகம்தான். பிராவோ இருந்தவரை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. நியூசிலாந்து அணியில் இவர் மிக முக்கியமான வீரர்.
அதோடு அங்கே சமயங்களில் கேப்டனாக கூட இருந்துள்ளார். ஆனாலும் கூட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இவருக்கு பெரிதாக சான்ஸ் கொடுத்ததே இல்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட்டதே இல்லை. இவர் அதை பற்றி எங்கும் புகார் கொடுத்தது இல்லை. எனக்கு வாய்ப்பு தரவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தது இல்லை.
அதே சமயம் அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இவர் சிறப்பாக ஆடி உள்ளார். பேட்டிங்கிலும் அவ்வப்போது நம்பிக்கை கொடுத்துள்ளார். பிராவோ இல்லாத நிலையில், சான்ட்னருக்கு தற்போது தொடர் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட வீரரை பேட்டி எடுத்தவர்கள் கிண்டல் செய்தது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.
சிஎஸ்கே அணியில் பெஞ்சில் இருந்தாலும் அவர்களின் மனசு கோணாத வகையில் தொடர்ந்து அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்கும். அந்த வகையில்தான் சான்ட்னருக்கும் அணி நிர்வாகம் ஆதரவு கொடுத்து வருகிறது. இதுவே அவரும் புகார் அளிக்காமல், விமர்சனங்களை வைக்காமல் இருக்க முக்கிய காரணம் ஆகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications