ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் வழங்கி உள்ள 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. திமுகவின் டாப் வாக்குறுதியாக இந்த 'இல்லத்தரசி' கூப்பன் திட்டம் உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்தை அறிவிப்பதற்கு பின் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம்..

"இது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல, தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணம்" - அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாக முழங்க, ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இப்போது அந்த 'இல்லத்தரசி' கூப்பன் திட்டத்தின் மீதுதான் விழுந்திருக்கிறது.

dmk

அதிமுகவின் 'இலவச பிரிட்ஜ்' அறிவிப்புக்கு செக் வைக்கும் விதமாக, 'யார் யாருக்கு என்ன தேவையோ அதை அவர்களே வாங்கிக்கொள்ளட்டும்' என்ற ஸ்டைலில் திமுக இறக்கியிருக்கும் இந்த 'கூப்பன் ரூட்' இப்போது ஹாட் டாபிக்!

என்ன இந்த 'இல்லத்தரசி' திட்டம்?

எளிமையாகச் சொன்னால், ரேஷன் கார்டு வைத்திருக்கும், வருமான வரி செலுத்தாத குடும்பங்களின் பெண் தலைவிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்புள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (One-time) கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை நீங்களே வாங்கிக்கொள்ளலாம்.

தகுதிகள் என்ன?

குடும்பத் தலைவியின் பெயரில் கூப்பன் வழங்கப்படும்.

வருமான வரி செலுத்தாத (Non-Income Tax) குடும்பங்கள் மட்டுமே இதற்கு தகுதி.

அரசு அங்கீகரித்த எலக்ட்ரானிக் விற்பனை நிலையங்களில் இந்த கூப்பனைப் பயன்படுத்தலாம்.

ஏன் இந்த 'கூப்பன்' ஐடியா?

வழக்கமாக தேர்தல் என்றாலே "நாங்கள் மிக்ஸி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம்" என்று அரசு ஒரு குறிப்பிட்ட பொருளைத் திணிக்கும். ஆனால், இந்த முறை திமுகவின் லாஜிக் கொஞ்சம் வேறு.

தேர்வு சுதந்திரம் (Freedom of Choice): சிலரது வீட்டில் ஏற்கனவே பழைய பிரிட்ஜ் இருக்கலாம், அவர்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் தேவைப்படலாம். சிலருக்கு மிக்ஸி பழுதாகி இருக்கலாம். அரசு கொடுக்கும் ஒரே பொருளுக்காகக் காத்திருக்காமல், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் என எது தேவையோ அதை இந்த 8,000 ரூபாய் கூப்பனை வைத்து மக்கள் வாங்கிக்கொள்ளலாம்.

பணம் வீணாவதைத் தடுத்தல்: "பணமாகக் கொடுத்தால் அதை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கூப்பனாகக் கொடுத்தால், அது வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே பயன்படும்" என்கிறது திமுக தரப்பு.

பராமரிப்பு மற்றும் தரம்: அரசு கொள்முதல் செய்து கொடுக்கும் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது புகார்கள் எழும். ஆனால், மக்களே கடைக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த பிராண்டைத் தேர்வு செய்யும்போது அந்தப் புகார் எழாது.

அதிமுக 'பிரிட்ஜ்' என்றதும், திமுக 'அனைத்தும்' என விரிவுபடுத்தியது ஒரு புத்திசாலித்தனமான நகர்வுதான். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தியதுடன், இந்த 8,000 ரூபாய் கூப்பனையும் சேர்த்திருப்பது பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து வீசப்பட்ட 'அஸ்திரம்'.

இருந்தாலும், "8,000 ரூபாய்க்குள் நல்ல தரமான வாஷிங் மெஷினோ, பிரிட்ஜோ கிடைக்குமா? மீதிப் பணத்தை மக்கள் கையில் இருந்து போட வேண்டுமே?" என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதேபோல், பழைய பொருட்களை மாற்றிக்கொள்ளவும் (Exchange) இந்த கூப்பனைப் பயன்படுத்தலாம் என்பது ஒரு ஆறுதல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+