"அனிதா".. அந்த சீனை நோட் பண்ணீங்களா? நெஞ்சுக்கு நீதியில் உதயநிதி சொன்ன மெசேஜ்.. நெகிழ்ச்சி!
சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தில் இடம்பெற்று இருக்கும் கதாபாத்திரம் ஒன்று பெயர் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் திரையரங்கு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
திமுகவினர் இந்த படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் படம் பார்த்து வருகிறார்கள். அதேபோல் மொத்தமாக டிக்கெட் வாங்கி அதை இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

நெஞ்சுக்கு நீதி
அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர பகுதிகளில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் உதயநிதி அவர்களின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கரகாட்டம் தப்பாட்டம் என பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினர். தொடர்ந்து கேக் வெட்டி பட்டாசு வெடித்து ரசிகர்கள் நடனமாடி படம் வெளியான திரையரங்குகள் முன்பு ஆரவாரம் செய்து கொண்டாடினர்

திமுக கொண்டாட்டம்
இதேபோல சேலம் மாநகரில் உதயநிதி திரைப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார். ரசிகர்களின் கொண்டாட்டத்தால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெள்ளிவிழாவாக திமுக இளைஞரணி துணை செயலாளர் முருகானந்தம் தலைமையில், தாராபுரம் எஸ்.வி.ஆர் விஷுவல் திரையரங்கு முன்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

நிர்வாகிகள் ஏற்பாடு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள எஸ் வி ஆர் விஷுவல் திரையரங்கில் ஒளிபரப்ப இருந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், மற்றும் திமுக நிர்வாகிகள் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுவையில் ஏற்பாடு
மேலும் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுகவினர் பார்த்து ரசித்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் உத்தமன் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா வழங்கினார்.

மேலூரில் ஏற்பாடு
மேலூரில் உள்ள திரையரங்கில் முதல் காட்சியை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக படம் திரையிடப்படுவதையொட்டி , திரையரங்கு முன்பு கூடி இருந்த ஏராளமான திமுகவினர் மேள தாளத்துடன் பட்டாசு வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படத்தினை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் திரை அரங்கில் அமர்ந்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திமுகவினர் பார்த்து ரசித்தனர்.

அனிதா
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி படத்தில் இடம்பெற்று இருக்கும் கதாபாத்திரம் ஒன்று பெயர் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி படத்தில் வரும் டாக்டர் பாத்திரத்திற்கு அனிதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி அனிதா. அனிதாவிற்கு நீதி வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்து குரல் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். என் முன்னாடி அந்த பொண்ணு டாக்டர் கோட் போடக்கூடாது என்று கூறும் ஆதிக்கச் ஜாதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிக்கு முன்னால் அனிதா கோர்ட் மாட்டிக்கொண்டு வரும் காட்சியமைப்பும், மறைந்த அனிதாவை டாக்டராக கண்முன் காட்டும், மாஸ் காட்சியாக இருந்தது. சமூக நீதி பார்வை இந்தக் காட்சியில் தென்பட்டது. ஜெய்பீம் போலவே ஒடுக்கப்பட்டவர்கள் வலியை நெஞ்சுக்கு நீதி பேசியுள்ளது.

நீட் தேர்வு
பல மேடைகளில் அனிதா பற்றி இவர் பேசி இருக்கிறார். அனிதாவிற்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று பல மேடைகளில் இவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் தற்போது படத்தில் வரும் மருத்துவர் பாத்திரத்திற்கு அனிதா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை நோட் செய்த பலர், அந்த பெயரை கேட்டதும் நெகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டு வருகின்றனர். டாக்டரை அனிதா அனிதா என்று அழைப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.
-
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications