"மாஸ்டர்மைண்ட்".. ஸ்டாலின் போட்ட லிஸ்டில் இருந்த "ஒரே" ஆள்.. ப்பா தரமான வியூகம்.. வெலவெலத்த அதிமுக!
சென்னை: நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு ஒன்றும் சாதாரணமான ரெய்டு கிடையாது . இதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒரு நடவடிக்கை.. ஐபிஎஸ் கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியது. இவரின் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளை விரிவாக்க முடிவு செய்தது.
அதன்படியே முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்து முன்னாள் மாஜி அமைச்சர்கள் பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் புகார் பட்டியலை கந்தசாமி அளித்தார். இது ஏற்கனவே திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது உருவாக்கிய பட்டியல்தான்.
இந்த பட்டியலைத்தான் சரி பார்த்து.. புகார்களை திரட்டி.. பின்னர் யார் வீட்டில் எப்போது ரெய்டு நடத்தலாம் என்று ப்ளூ பிரிண்ட் போட்டு அதை முதல்வரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை வழங்கி உள்ளது.

ரெய்டு
இதன் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டும் நடைபெற்று வருகிறது. முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள். முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடைசியாக காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

குழப்பம்
இந்த நிலையில்தான் அதிசயமாக முன்னாள் எம்எல்ஏ நாமக்கல்லை சேர்ந்த கேபிபி பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை மாஜி எம்எல்ஏக்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் திடீரென மாஜி எம்எல்ஏ வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது அதிமுகவையே பரபரப்பிற்கு உள்ளாக்கியது. இதற்கு பின் வேறு முக்கிய காரணமும் இருக்கிறது. 2005ல் தீவிர அரசியலுக்கு வந்த பாஸ்கர் நாமக்கல் நகர மன்ற தலைவராக சில காலம் இருந்தார். பின்னர் தங்கமணி உதவியால் 2011ல் நாமக்கல்லில் எம்எல்ஏ ஆனார்.

எம்எல்ஏ
இப்படிப்பட்ட பாஸ்கர் சமூக ரீதியாக எடப்பாடி, தங்கமணி என பல பெரிய தலைகளுக்கு க்ளோஸ். அதோடு 4வ கோடி ரூபாய்க்கு தனி பங்களா. அதிகாரப்பூர்வமாக 7 கோடிக்கு ரொக்கமான சொத்துக்கள். 14 கோடிக்கு இன்னொரு பங்களா என்று 14 வருடத்தில் இவரின் சொத்துக்கள் எல்லாம் ராக்கெட் போல உயர்ந்து உள்ளது. அதோடு எடப்பாடி, தங்கமணிக்கு இவர் மிக நெருக்கமாக இருந்திருக்கும். 2011, 2016ல் அதிமுக நாமக்கல்லில் வலுவாக இருக்க இவர் மிக முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.நாமக்கல்லில் அதிமுகவின் அரசியல் மாஸ்டர்மைன்ட் போல இவர் செயல்பட்டு வந்துள்ளார்.

தூக்கினார்
முன்பு கந்தசாமி - ஸ்டாலின் இடையிலான விவாதத்தில் பைல்கள் பரிமாறியதாக கூறினோமே. அந்த லிஸ்டில் இருந்த ஒரே ஒரு எம்எல்ஏ பாஸ்கர் மட்டுமே. இவர் இப்போது மாஜி எம்எல்ஏ ஆகி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை கூட விட்டு வைக்கவில்லையே.. அடுத்து நம் வீட்டில்தான் ரெய்டு நடக்குமோ என்ற அச்சத்தை அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியிலும், முன்னாள் எம்எல்ஏக்கள் மத்தியிலும் இந்த ரெய்டு ஏற்படுத்தி உள்ளது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications