கைதானார் எடப்பாடி பழனிசாமி.. தடையை மீறி அதிமுக போராட்டம்.. போலீசாருடன் எம்எல்ஏக்கள் தள்ளுமுள்ளு
எடப்பாடி பழனிசாமி இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போகிறார்
சென்னை: சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அதிமுக சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.. போலீசார் இதற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தை துவக்கினர்.. கருப்பு சட்டை அணிந்து வந்த எடப்பாடி பழனிசாமி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். முனுசாமி,செங்கோட்டையன், அரக்கோணம்ரவி உதயகுமார், தஙகமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து எம்எல்ஏக்கள், நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் அளித்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த கடிதம் மீது அப்பாவு எந்த முடிவையும் அறிவிக்காமலேயே இருந்தார்.. எனவே நேற்றுமுன்தினம் சட்டசபை கூடிய நிலையில், யார் எதிர்க்கட்சி துணை தலைவராக சபாநாயகர் அப்பாவு யாரை அறிவிக்கப்போகிறார்? இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு துவங்கியது..

சீட் அலாட்
எதிர்பார்த்தபடியே, எதிர்க்கட்சி துணை தலைவர். இருக்கை ஓபிஎஸ்ஸுக்கு ஒதுக்கப்பட்டது.. இந்த விஷயம் முன்கூட்டியே லேசாக கசிந்ததால், எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பு எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வரவில்லை.. இந்நிலையில், நேற்ற 2வது நாளாக சட்டசபை கூடஉள்ள நிலையில், அதற்கு முன்கூட்டியே, எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக தான் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவுவை, எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து வலியுறுத்தினார்..

ஆப்சென்ட்
அதற்கு அப்பாவு, "நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் என்னை கட்டாயப்படுத்த முடியாது.. சபை விதிகள் உள்ளன.. அதற்கேற்றபடிதான் முடிவு எடுக்க முடியும்எதிர்கட்சித்துணைத்தலைவர் யார் என்பதை சட்டசபையில் அறிவிப்பேன் என்று எடப்பாடி பழனிச்சாமியிடமும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களிடமும் கூறினார் அப்பாவு. அப்பாவு இப்படி சொன்ன அடுத்த சில நிமிடங்களிலேயே அவை கூடியது.. எடப்பாடி & டீம் அப்படியே மொத்தமாக சபைக்குள் நுழைந்தனர்.. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அமர்த்த வேண்டும் என்று மறுபடியும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், சபாநாயகர் அப்பாவுவிடம் முறையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அமளி + துமளி
தொடர்ந்து அவையில் கூச்சலிட்டதால் எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு போலீசாருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.. அதேசமயம், நேற்றைய சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க அவர்களுக்கு தடை விதித்தார். ஆனால், இன்றைய தினம் அதாவது 19ம் தேதி கூட்டத்தொடரில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்... இந்த நிலையில் அதிமுக தரப்பில் திடீரென ஒரு அறிக்க வெளியானது.. அந்த அறிக்கையில், "நாளை உண்ணாவிரதம்" நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வள்ளுவர் கோட்டம்
அதில் தமிழக சட்டசபையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையை கண்டித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம், நாளை (அக்.,19) சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படி சபாநாயகரை கண்டித்து இன்றைய தினம் உண்ணாவிரதம் நடைபெற போவதாக அறிவித்துள்ளது மிகுந்த பரபரப்பையும் கிளப்பிவிட்டு வருகிறது. முன்னதாக, இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதி கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்படி மனு அளித்தது..

பர்மிஷன் மறுப்பு
அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளருமான ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் மனு அளித்தனர்.. ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.. சட்டம் , ஒழுங்கு பிரச்சனை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கமும் தரரப்பட்டுள்ளது.. எனினும், போலீசார் அனுமதி கொடுக்காவிட்டாலும், போராட்டம் நடத்த உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

டென்ஷன்
எனவே, போலீசார் உண்ணாவிரத பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு விட்டனர்.. காலையில் இருந்தே பாதுகாப்பு பணியில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து, சரியாக, 9 மணிக்கு முனுசாமி, செங்கோட்டையன், அரக்கோணம்ரவி உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் போராட்டத்தில் பங்கேற்க வருகை தந்தனர்.. அடுத்த சில நிமிடங்களிலேயே கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.. தடையையும் மீறி, அங்கேயே தரையில் அமர்ந்து, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன..

பஸ் + கைது
பிறகு அவர்களை போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.. ஆனால், கைவிட மறுத்ததுடன், கலைந்து செல்லவும் அதிமுகவினர் கூறினர்.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.. கைது செய்த அனைவரையும் அரசு பேருந்துகளில் ஏற்றி, ராஜரத்தினம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதாலேயே, போராட்டத்துக்கு முன்பே அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications