அதை பற்றி வாயை திறக்காதீங்க.. பாஜகவிற்கு எடப்பாடியின் அதிரடி உத்தரவு? குலுங்கிய நெடுஞ்சாலை
சென்னை: அதிமுக பாஜக மோதல், அமித் ஷா வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திப்பு நடத்தினர். அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்தார்.

இதனால் அதிமுக - பாஜக ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா பெயரை குறிப்பிடாமல்.. முதல்வர்கள் ஊழலுக்காக சிறைக்கு சென்ற ஊர் இது என்று அண்ணாமலை பேசியது அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு எதிராக மிக கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்த அமித் ஷாவையும் எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லை. 9 ஆண்டு பாஜக ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் கலந்து கொண்டார்.
சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் அமைச்சர் அமித் ஷா சென்னையில் உள்ள கிண்டி ஐ.டி.சி ஹோட்டலுக்கு சென்று தங்கினார். அங்கு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
இந்த பயணத்தில் அவர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினர் யாரையும் சந்திக்கவில்லை. எடப்பாடியும் அமித் ஷாவை சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பாஜக மோதல், அமித் ஷா வருகை குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் அமித் ஷா - எடப்பாடி - அண்ணாமலை இடையே ஆலோசனை செய்யப்பட்டது.
அதில் கூட்டணி தொடர்வது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. அதில் கூட்டணியில் ஓபிஎஸ்ஸை சேர்ப்பது, கூட்டணியில் 9 இடங்களை கேட்பது போன்ற விஷயங்கள் பற்றி பேசப்பட்டது. ஆனால் இதில் முடிவு எடுக்கப்படவில்லை. பாஜகவின் இந்த கோரிக்கைகளை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை.
அப்போது பேசி முடிவு எடுக்கப்படாத விஷயங்களை இப்போது பேசி உறுதி செய்யவே அமித் ஷா தமிழ்நாடு வந்தார். எடப்பாடியுடன் அமித் ஷா பேச முயன்றார். ஆனால் அது முடியவில்லை. ஓபிஎஸ்ஸை அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்த்துக்கொள்வது பற்றி பேச எடப்பாடி விரும்பவில்லை. மோடி வர வேண்டும் என்று நினைக்கும் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
ஆனால் இவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எடப்பாடி கூறி வருகிறார். அதை பற்றி பேசவே கூடாது என்று எடப்பாடி தரப்பு கூறி வருகிறது. இதனால்தான் இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அமித் ஷாவை எடப்பாடி சந்திக்கவில்லை. எடப்பாடி நெடுஞ்சாலை வீட்டிலேயே இருந்தார். இன்னொரு பக்கம் தேர்தலில் பாஜக தனித்து நிற்கும் திட்டத்திலும் இல்லை.
அதிமுகவுடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்றுதான் பாஜக நினைக்கிறது. ஆனால் கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை சேர்க்க வேண்டும். எல்லோரும் சேர்ந்தால் எளிமையாக வெற்றிபெற முடியும் என்று பாஜக நினைக்கிறது. இப்போது ஜெயலலிதாவை விமர்சனம் செய்து அண்ணாமலை பேசி உள்ளார்.
இந்திய வரலாற்றிலேயே ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற முதல்வர் ஜெயலலலிதாதான். அதனால் அவரைத்தான் அண்ணாமலை சொல்லி இருப்பார். இந்த மோதலும் தற்போது கூட்டணியில் ஏற்பட்டு உள்ளது. இவர்கள் கூட்டணியில் இருக்கும் சிக்கல்கள் இன்னும் முடியவில்லை.

இன்று நடக்க போகும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் சில முக்கியமான விஷயங்களை முடிவு எடுப்பார்கள். பாஜகவுடன் சேர வேண்டும் என்று அதிமுகவில் சிலர் கூறுகின்றனர். பாஜக வேண்டாம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதனால் பாஜகவுடன் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்று இன்று அதிமுகவில் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது, என்று கூறி உள்ளார்.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications