பார்த்தீங்களா? எடப்பாடி எடுத்த துணிச்சல் முடிவு.. "அவங்க" பயந்தது போலவே ஆகிடுச்சு.. வெலவெலத்த சவுத்!
சென்னை: அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகளில் தென் மண்டல நிர்வாகிகளுக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதேபோல் முக்கியமான தென் மண்டல நிர்வாகி ஒருவர் ஓரம்கட்டப்பட்டு இருக்கிறார்.
Recommended Video
அதிமுக பொதுக்குழு முடிந்த நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதிமுக பொதுக்குழு நாளிலேயே பொருளாளரான ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசன் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் நேற்று அதிமுகவில் பல புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

நிர்வாகிகள் நியமனம்
அதன்படி அதிமுக துணைப்பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளார். அவர் எம்ஜிஆர் மன்ற செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுகவின் தலைமை கழக செயலாளராக வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் 11 பேர் அதிமுக கழக அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அமைப்புச்செயலாளர்
செல்லூர் ராஜு, சிவி சண்முகம் ஆகியோருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனபால், அன்பழகன், காமராஜ், ஓ.எஸ் மணியன் ஆகியோருக்கும் அமைப்பு செயலாளர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பாலகங்கா, ராஜன் செல்லப்பா, கடம்பூர் ராஜு, பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதான் தற்போது தென்னக அதிமுகவினர் இடையே விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தெற்கு
அதிமுகவில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய நியமனத்தை தென் மண்டல நிர்வாகிகள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி.. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகும் பட்சத்தில் தென்னக நிர்வாகிகள் ஓரம்கட்டப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதன்படியேதான் தற்போது தென்னக நிர்வாகிகள் ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். பெரிதாக எங்களுக்கு வாய்ப்புவழங்கப்படவில்லை. ஜாதி ரீதியாக பிரிவினை செய்யப்பட்டுள்ளது.

பிரிவினர்
ஒரு சில பிரிவினருக்கு மட்டும்தான் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் பயந்தது போலவே ஆகிவிட்டது என்று புலம்பி உள்ளனர். தென் மண்டலமே இந்த அறிவிப்பால் கொஞ்சம் வெலவெலத்துதான் போய் இருக்கிறதாம். அதேபோல் தென் மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு போட்டியாக ஆர்பி உதயகுமாரை எடப்பாடி வளர்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆர் பி உதயகுமாரும் எடப்பாடிக்கு ஆதரவாக பல முறை பேசினார். ஓபிஎஸ்ஸிடம் இவர் தூதும் சென்றார்.

வாய்ப்பு இல்லை
ஆனால் அப்படிப்பட்ட ஆர்பி உதயகுமாருக்கும் கட்சியில் பெரிய பொறுப்பு வழங்கப்படவில்லை. அவரும் ஓரம்கட்டப்பட்டு உள்ளார். இதுவும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆனால் எடப்பாடி ஆதரவு தரப்போ.. இது முதல் கட்ட லிஸ்ட்தான். இதில் எடப்பாடி துணிச்சலாக பல நியமனங்களை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அடுத்த கட்ட நியமனத்தில் விடுபட்ட பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications