ஓ இதுக்குத்தானா? பாஜக பேசிய டீலிங்.. எடப்பாடி டீம் வேட்பாளர் வேட்புமனு தாக்கலை தள்ளிப்போட்டது ஏன்?

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற பாஜகவின் குரலுக்கு செவி மடுக்க எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், வேட்பு மனு தாக்கலை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது. எடப்பாடி தரப்பின் இந்த திடீர் முடிவு பல யூகங்களை கிளப்பி உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் இணைய வேண்டும் என்று பாஜக முயன்று வருகிறது. அதிமுகவில் பிரிந்து இருக்கும் தலைகளை ஒன்று சேர்க்க பாஜக தரப்பு முடிவு செய்துள்ளது.

மாற்று கட்சி விவகாரத்தில் பொதுவாக தலையிட மாட்டோம் என்று சொல்லும் பாஜக இந்த முறை அதிமுக தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது .

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்தே பாஜக தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்து உள்ளார். எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது. எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது. இருவரும் ஒன்றாக இருந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று இந்த சந்திப்பில் பேசி உள்ளனர்.

நிலைப்பாடு

நிலைப்பாடு

இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரும் தங்கள் நிலைப்பாட்டை எப்போது தெரிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் நீண்ட காலமாகவே அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நேற்று கூட அவர் அளித்த பேட்டியில், இரட்டை இலை சின்னம் முடங்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. இரட்டை இலை இருக்க வேண்டும். அதிமுக சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். பி பார்மில் கையெழுத்து போட என்னிடம் அனுப்பினால் நான் கையெழுத்து போடுவேன். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். தொண்டர்கள் விருப்பமும் அதுதான். அதுவே நடக்க வேண்டும்.

எடப்பாடி நிலைப்பாடு

எடப்பாடி நிலைப்பாடு

இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா என்று விரைவில் அறிவிப்பு வரும். அதிமுக தொண்டர்கள், தமிழ்நாடு மக்கள், பாஜக என்று எல்லோரும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் என்றார். ஆனால் எடப்பாடி என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இடமே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியும் வருகிறார். இந்த நிலையில்தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக அவரிடம் போய் பேசி உள்ளது.

எடப்பாடி என்ன முடிவு

எடப்பாடி என்ன முடிவு

இதில் எடப்பாடி என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் ஒத்திவைத்து உள்ளது. வரும் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி சார்பாக பொது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று பாஜக கூறி உள்ளது. அப்படி இருக்க எடப்பாடி தரப்பு வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் தள்ளிப்போய் உள்ளது.

தள்ளிப்போனது

தள்ளிப்போனது

எடப்பாடி தரப்பின் இந்த திடீர் முடிவு பல யூகங்களை கிளப்பி உள்ளது. பாஜகவின் சமரச பேச்சை கேட்டு எடப்பாடி தரப்பு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. வேட்பாளரை நிறுத்துவதில் மாற்றம் இல்லை என்றால் வேட்புமனுத்தாக்கலை தள்ளிப்போட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி இருக்க எடப்பாடி ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும்? பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற பாஜகவின் குரலுக்கு செவி மடுக்க எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+