சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது! சசிகலாவிற்காக குதிக்கும் "அறிவுஜீவிகள்".. சூடுபிடிக்கும் சங்கதி!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவிற்காக பல்வேறு முன்னால ஐஏஎஸ் அதிகாரிகள், சில அறிவு ஜீவிகள் களமிறங்கி அவருக்கு ஆலோசனை வழங்க போவதாக தகவல்கள் வருகின்றன.

சசிகலாவுக்காக அவரது சமூகத்தின் அறிவுஜீவிகள் பலரும் ஒன்றிணைந்து ஆலோசித்திருக்கிறார்கள். தியேனேஸ்வரன். தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

தமிழக அதிகார வட்டாரங்களில் இவரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சி காலத்தில் அவரது நம்பிக்கையைப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இவர் முக்கியமானவர்.

ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்.. அசராமல் சொன்ன சசிகலா! திமுக ஆட்சியில் மனசு நிறையவில்லை என்றும் குட்டு ஜெயலலிதா போல் ஆட்சி செய்வேன்.. அசராமல் சொன்ன சசிகலா! திமுக ஆட்சியில் மனசு நிறையவில்லை என்றும் குட்டு

யார் இவர்?

யார் இவர்?

காரணம், சசிகலாவுக்கு மிக வேண்டப்பட்டவர் தியானேஸ்வரன். ஜெயலலிதா ஆட்சியில், கனிம வளத்துறையின் சேர்மனாக இருந்தார். அந்த துறையில் நடந்த பல கோடி ரூபாய் ஊழல் புகார்களும் இவர் மீது வைக்கப்பட்டது . அவர் மீது திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டு தண்டிக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தியானேஸ்வரன் கடந்த ஆண்டு காலமானார்.

 நினைவேந்தல்

நினைவேந்தல்

அவரது முதல் வருட நினைவேந்தல் கூட்டம் கடந்த 9-ந்தேதி சென்னை அடையாறு கேட் க்ரௌன் பிளாஷா நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த நினைவேந்தல் கூட்டத்தை அவரது குடும்பம் ஒருங்கிணைத்திருந்தது. தமிழக அரசில் பணி புரிந்து ஓய்வு பெற்ற முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அதிகாரிகள், ஓய்வுப் பெற்ற நீதிபதிகள், பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய பிரபலங்கள் என பலரும் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிந்தனர்.

சசிகலா பற்றி பேச்சு

சசிகலா பற்றி பேச்சு

சுமார் 100 பேர் இதில் கலந்து கொண்டனர். நினைவேந்தல் கூட்டம் என்பது சசிகலாவின் அரசியல் பேசும் ஆலோசனைக் கூட்டமாக நடந்ததுதான் இதில் ஹைலைட் ! கூட்டத்தில் பேசிய அனைவருமே, தியானேஸ்வரனுக்கும் சசிகலாவுக்கும் இருந்த நட்பு, மரியாதை, ஜெயலலிதா ஆட்சியில் அவர் பணி செய்த அனுபவம் என பலவற்றையும் பகிர்ந்துகொண்டனர். பல முக்கிய விஷயங்கள் பற்றியும் , தமிழ்நாடு அரசியல் பற்றியும் இவர்கள் பேசி உள்ளனர்.

சசிகலா விவகாரம்

சசிகலா விவகாரம்

அது மட்டுமல்லாமல், தியானேஸ்வரன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, '' அதிமுக தலைமைக்கு சசிகலா வருவதற்கு நம்முடைய அனைத்து பலத்தையும் பயன்படுத்த வேண்டும். அவருக்கான அரசியல் அதிமுகவில் இப்போதும் வெற்றிடமாகத் தான் இருக்கிறது. ஜெயலலிதாவோடு 35 ஆண்டுகாலம் நல்லது கெட்டது அனைத்திற்கும் உறுதுணையாக இருந்த சசிகலா, இன்றைக்கு அரசியல் அதிகாரமில்லாமல் இருப்பது நமக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது.

உதவியாக இறங்க முடிவு

உதவியாக இறங்க முடிவு

சசிகலா இல்லாமல் அதிமுக இல்லை. அவரை நாம் தான் ஆதரிக்க வேண்டும். இந்த சூழலில்தான் சசிகலாவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்முடைய ஆலோசனைகள் தேவை. அதனால் சசிகலாவின் அரசியலுக்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய நாம் தயாராக வேண்டும்'' என்று பேசியிருகிறார்கள். சசிகலாவை இவர்கள் சந்திப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதாக விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Why did few former IAS officers discuss Sasikala in a Chennai function? சசிகலாவிற்காக பல்வேறு முன்னால ஐஏஎஸ் அதிகாரிகள், சில அறிவு ஜீவிகள் களமிறங்கி அவருக்கு ஆலோசனை வழங்க போவதாக தகவல்கள் வருகின்றன.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X