"சுக்குமி + லகுதி + ப்பிலி".. பிடிஆரின் தமிழை கிண்டலடித்த எச்.ராஜா.. கிளம்பி வந்த "உடன்பிறப்புகள்"
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக நிதியமைச்சரின் பேச்சுகுறித்து கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக நிதியமைச்சரின் பேச்சுகுறித்து கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. இதுகுறித்த ட்வீட்தான் இணையத்தில் ஷேர் ஆகிவருகிறது.
தமிழக அரசின் சார்பில் 2023 - 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது... இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.
இதில் தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது...

புரட்சி திட்டம்
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது.. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று பிடிஆர் இன்றைய தினம் அறிவித்துள்ளார்... அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று நிதியமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளார். புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

1000 ரூபாய்
தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. இதையே பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளும் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றன.. இப்படி பட்ஜெட் குறித்து, கட்சி தலைவர்கள் விமர்சித்து வரும்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா மட்டும், நிதிநிலை அறிக்கை குறித்து வாசிக்கும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தமிழை, கிண்டல் செய்துள்ளார்.

கிடுக்கிப்பிடி
பிடிஆரை பொறுத்தவரை நிறைய படித்தவர்.. அதிலும் வெளிநாட்டில் படித்து அங்கேயே பணிபுரிந்தவரும்கூட.. மிகச்சிறந்த அறிவாளி.. திமுக அரசு பொறுப்பேற்றதுமே நியமிக்கப்பட்ட அமைச்சரவையில், அதிக அளவு பேசப்பட்டவர் அநேகமாக பிடிஆராகத்தான் இருக்கும்.. மத்திய அரசையும், முந்தைய அதிமுக அரசையும் ஏராளமான கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டவரும் பிடிஆராகத்தான் இருக்க முடியும்.. அந்த அளவுக்கு இவரது செயல்பாடுகள் மக்களை கவனிக்க வைத்து வருகின்றன.. மேலும், தமிழில் சரளமாகவும், திடமாகவும் பேசக்கூடியவர். எனவே, புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளுடன் பிடிஆரின் நறுக் பேச்சு இந்திய அளவில் பிரபலமாவது வழக்கமான ஒன்று.. ஆனாலும் தமிழ் வாசிப்பில் சற்றுத் தடுமாறுவதாக கூறப்படுகிறது.

சாப்பா டுபோ டப்ப டும்
இதைதான், பாஜக கிண்டல் செய்தும் வருகிறது.. நிதியமைச்சரின் இந்த தமிழ் தடுமாற்றத்தை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, ஒரு ட்வீட்டையே பதிவிட்டுவிட்டார்.. அதில், "சுக்குமி, லகுதி, ப்பிலி" என்று கிண்டலடித்துள்ளார்.. உடனே இதை பார்த்த பாஜகவினர் திரண்டு வந்து, 'சாப்பா டுபோ டப்ப டும்' என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு, எச்.ராஜாவின் ட்வீட்டை வழிமொழிந்து வருகின்றனர்... இதை பார்த்ததும் டென்ஷனாகிவிட்ட திமுகவினர், எச்.ராஜாவின் "சுக்கு மிலகு திப்பிலி" என்பதை "ஐயா அது, சுக்கு மிளகு திப்பிலி. போய் ஒழுங்கா தமிழ் மொழியை படித்து வாங்க" என்று பதிலுக்கு கிண்டலடித்து வருகின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications