பிசிறு.. சீமான் அப்படி சொன்னது இருக்கட்டும்.. காளியம்மாள் ரியாக்சனை பார்த்தீங்களா? என்னங்க இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியின் உறுப்பினர் காளியம்மாள் குறித்து பேசிய விஷயங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கட்சியினர் இடையே விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காளியம்மாள் கொடுக்கும் ரியாக்சன் என்ன என்பதுதான் ஹைலைட்டே

சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் சீமான் காளியம்மாளை விமர்சனம் செய்வது போல் ஆடியோ இருந்தது. அதில், காளியம்மாளை எல்லாம் தட்டி விடலாம். அவர் பெரிய ஆள் இல்லை. அவர் ஒரு பிசிறு. காளியம்மாள் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்துவிட்டு ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.

naam tamilar Seeman Kaliyamma

மறுத்த நாம் தமிழர் - ஒப்புக்கொண்ட சீமான்: ஆனால் இந்த விவகாரத்தில்.. ஆடியோ வெளியான சமயத்தில் இதை நாம் தமிழர் பலர் மறுத்தனர். அதாவது இதை சீமான் பேசவில்லை என்று கூறி மறுத்தனர். இது ஏஐ என்றும் கூட விளக்கம் கொடுத்தனர். ஏஐ வைத்து இப்படி எல்லாம் ஆடியோ உருவாக்கலாம் என்றனர்.

இது சீமானின் பேச்சு கிடையாது என்று கடுமையாக பதில் வாதம் வைத்தனர். . இப்படிப்பட்ட நிலையில்தான் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். நாம் தமிழர் கஷ்டப்பட்டு மறுக்க.. சீமான் தான்தான் பேசினேன் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பிசிறு அடிக்குது: பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், தீடீரென இந்த வெண்ணெய்களுக்கு காளியம்மாள் மீது பாசம். டேய்... அவள்தான் மயிலாடுதுறையில் போட்டியிட்டாளே.. ***** அப்போதே அவளை ஜெயிக்க வேண்டியது தானே. வெண்ணெய்களா அப்போது ஏன் ஓட்டு போடவில்லை.

அவளுக்கு வேலை பார்த்து இருக்கலாமே.. நாங்கள் பிசுறுன்னு சொல்லுவோம்.. கொசுறுன்னு சொல்லுவோம். உங்களுக்கு என்ன ******க்கு பிரச்சனை. உங்களுக்கு என்ன பிரச்சனை நான் அவளை எப்படி கூப்பிட்டால் என்ன நான் என்ன வேண்டுமானாலும் சொல்வேன். நீ அவளுக்கு வேலை பார்த்தாயா.. உனக்கு என்ன? என்று கடுமையாக பேசி இருந்தார். சீமான் அளித்துள்ள விளக்கம் மக்கள் இடையே அதிர்ச்சியை.. விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

காளியம்மாள் ரியாக்சன்: சீமான் தனது கட்சியின் உறுப்பினர் காளியம்மாள் குறித்து பேசிய விஷயங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கட்சியினர் இடையே விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காளியம்மாள் கொடுக்கும் ரியாக்சன் என்ன என்பதுதான் ஹைலைட்டே

அதன்படி நாம் தமிழர் காளியம்மாள் இதுவரை எதுவும் பேசவில்லை. காளியம்மாள் எந்த மறுப்போ.. எதிர்ப்போ இதில் தெரிவிக்கவில்லை. பொதுவாக கடுமையான விமர்சனங்களுக்கு அதே பாணியில் பதிலடி தரும் காளியம்மாள் இந்த முறை அமைதியாக உள்ளார். கட்சியில் சீமானுக்கு அடுத்து பெரிய புகழ் கொண்டவராக காளியம்மாள் உருவெடுத்து உள்ளார். கட்சி நிர்வாகிகள், மக்கள் இடையே பிரபலமாக உள்ளார்.

அதோடு ஊடகங்களிலும் அடிக்கடி வருகிறார். அப்படி இருக்க கட்சியின் முக்கிய உறுப்பினரை அதன் ஒருங்கிணைப்பாளர் இப்படி மோசமாக பேசியது கடுமையாக கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பெண் அமைப்புகளும் இதில் இதுவரை விமர்சனங்களை வைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+