மதுரை, சென்னையால் "புகையுது" கோட்டை.. ஸ்டாலின் வேற ஊர்ல இல்லை.. அமுதா எங்கே காணோம்?.. இதென்ன புதுசா
சென்னை: காவல்துறையில் நேற்றைய தினம் 2 டிரான்ஸ்பர்கள் நடந்துள்ளன.. இந்த இடமாற்றம் குறித்துதான் கோட்டையில் ஒரே பரபரப்பாக பேசப்படுகிறது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. என்ன நடந்தது?
ஏற்கனவே, தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.. அந்தவரிசையில், ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நிலையில், ஐஜிக்களின் டிரான்ஸ்பர்களும் ஆரம்பமாகி உள்ளது.

மேலும், விரைவில் எம்பி தேர்தல் நெருங்கி வருகிறது.. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தலை நடத்தவும் முடிவாகி உள்ளது.. இதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டிரான்ஸ்பர்: இப்படிப்பட்ட சூழலில் கடந்த வாரம் தேர்தல் ஆணையம் முக்கிய ஒன்றை பிறப்பித்திருந்தது.. அதன்படி, ஒரே இடத்தில் 3 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் போலீசாரை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில காவல் துறைக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது..
அந்தவகையில், தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜிவால் நேற்றைய தினம் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியிருந்தார். அதில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பனீந்தரரெட்டி: இதற்கான உத்தரவு போக்குவரத்துத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தரரெட்டி பெயரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு, உள்துறை செயலாளர் பெயரில்தான் வரவேண்டும். ஆனால், பனீந்தரரெட்டி பெயரில் வந்திருக்கிறது. இதுதான் ஐ.பி.எஸ். வட்டாரங்களில் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, " உள்துறை செயலாளர் அமுதா விடுமுறையில் சென்றிருக்கிறார். அதனால் உள்துறையை கூடுதல் பொறுப்பாக பனீந்திரரெட்டியிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அவர் பெயரில் இடமாறுதல் வந்துள்ளது. இதில் தவறேதும் இல்லை " என்கிறது கோட்டை வட்டாரம்.
கோட்டை விவகாரம்: ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பினரோ, "உள்துறை என்பது சென்சிட்டிவ்வான போஸ்ட். அத்துறையின் செக்ரட்டரி லீவில் சென்றால் அதை வெளிப்படையாக அரசு தெரியப்படுத்த வேண்டும். உள்துறையை கூடுதல் பொறுப்பாக வேறு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கொடுக்கப்பட்டால் அதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆனால், இங்கு இரண்டுமே வெளிப்படையாக அரசால் அறிவிக்கப்படவில்லை.
அப்படியானால், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத சூழலில் அரசு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது ? சிலரின் உத்தரவுகளை நிறைவேற்ற அமுதா உடன்படாததால் அவரை லீவில் அனுப்பி வைத்துவிட்டு, தங்களுக்குத் தோதான ஒரு அதிகாரியிடம் அதாவது பனீந்திரரெட்டியிடம் உள்துறையை கொடுத்து அதன் மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள காய்கள் நகர்த்தப்படுகிறதா? அரசு நிர்வாகத்தில் பல மூடு மந்திரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன " என்று சர்ச்சையை கிளப்புகின்றனர்.
ஸ்டாலின்: ஐ.பி.எஸ். வட்டாரங்களில் இதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், ஆளும் தரப்பில் என்னென்ன சர்ச்சைகள், புகார்கள் கிளம்புமோ, அத்தனையையும் அரசியலாக்க எதிர்க்கட்சிகள் காத்து கொண்டிருக்கின்றன..
குறிப்பாக அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகளை ராஜ்பவனும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அப்படியிருக்கும்போது, ஆரம்பத்திலேயே முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு, இதுபோன்ற விவகாரங்களுக்கு இடம்தராமல், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications