அடையாளம் தெரியல.. சென்னை மாமன்றத்தை அதிர வைத்த தேவி.. ஸ்டன் ஆன மேயர் ப்ரியா.. அதிர்ந்திட்டாங்களே!
சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று நடந்த சம்பவம் ஒன்று மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக மேயர் பிரியா கொடுத்த ரியாக்சன் அங்கே இருந்த பலருக்கும் வியப்பை ஏற்படுத்த உள்ளது.
இன்று நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு மாட்டிற்கு ரூ. 2000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் மாடுகள் வளர்க்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் அதையும் மீறி பலர் மாடு வளர்த்து வருகின்றனர். அதோடு அதை சாலையிலும் விடும் வழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 10ம் தேதியன்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி பள்ளியை முடித்துக்கொண்டு தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று மாணவி மீது பாய்ந்தது. சுமார் 2 நிமிடங்களுக்கும் மேல் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவியின் முகம், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வரிசையாக பல இடங்களில் மக்கள் மாடு தாக்கி காயம் அடைந்தனர்.
இந்த நிலையில்தான் சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று நடந்த சம்பவம் ஒன்று மாநகராட்சி கவுன்சிலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக மேயர் பிரியா கொடுத்த ரியாக்சன் அங்கே இருந்த பலருக்கும் வியப்பை ஏற்படுத்த உள்ளது
என்ன நடந்தது?: வார்டு 39ன் கவுன்சிலர் தேவி இன்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு கோரி பேசினார். தனக்கு அல்லது மொத்தமாக கவுன்சிலர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு கோரினார்.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சோதனைக்கு சென்றதாகவும், போலீசார் அபராதம் விதிப்பதாகவும் கவுன்சில் கூட்டத்தில் கூறினார். போலீசார் எனக்கு பைன் போட்டனர் என்று புலம்பியபடி மீண்டும் மீண்டும் கூறினார்.,
அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால், அவரது வார்டில் உள்ளவர்களால் அவள் பைக் ஓட்டுவதைப் பார்க்க முடியாது, அவளை அடையாளம் காண முடியாது. கோரிக்கைகளை வைக்க முடியாது. அதனால் தனக்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும் என்று காரணம் கூறினார்.
இதற்கு பதிலளித்த ம.தி.மு.க., கவுன்சிலர் ஜீவன், ஹெல்மெட்டில் நகராட்சி கவுன்சிலர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளுங்கள். போலீஸ் பிடிக்காது என்று கவுன்சிலரிடம் கூறியது சிரிப்பலையை வரவழைத்தது. இதை எல்லாம் பார்த்து ஸ்டன் ஆன மேயர் பிரியா.. உடனே குறுக்கிட்டு ஹெல்மெட் அணிவது கட்டாய அரசு விதி என்றும், யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்றும் பதிலுக்கு கூறினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications