திடீரென ஸ்டாலின் அறைக்கு சென்ற பிடிஆர்.. அந்த 20 நிமிடம்.. அப்போ கன்பார்ம்டா.. வரப்போகும் "நியூஸ்"
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பல புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும்
சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினின் அறைக்கு சென்ற நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

என்ன சொன்னார்?
இது தொடர்பாக ஈரோடு கிழக்கில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டு எடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் ஆளும் திமுக சார்பாக திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பின்பாக இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு இருக்கும். திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

அறிவிப்பு
கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. முக்கியமாக தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் சரியாகவில்லை என்ற காரணத்திற்காக இந்த திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே தற்போது பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஆலோசனை
இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் ஸ்டாலினின் அறைக்கு சென்ற நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டார். பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடந்துள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து இவர்கள் பேசி உள்ளனர். முக்கியமாக பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

என்ன பேசினார்கள்
இந்த பட்ஜெட்டில் திட்டம் கண்டிப்பாக அறிவிக்கப்படும். ஆனால் பெரும்பாலும் ஜூன் மாதம் திட்டம் நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்த பட்ஜெட் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில அப்டேட்களை வெளியிட உள்ளார். இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது பேச்சில், வேலைவாய்ப்பு உருவாக்குவதுதான் அரசின் கொள்கை. கடந்த இரண்டு வருடத்தில் அதற்கு ஏற்ற திட்டங்களை வகுத்து இருக்கிறோம். மக்கள் பலருக்கு வேலை கிடைக்கும் விதமாக திட்டங்களை வகுத்து உள்ளோம். இதனால் வேலை வாய்ப்பு முன்பை விட தற்போது அதிகம் ஆகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பல புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும். முக்கியமாக சுயதொழில் செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்., என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications