Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

19 வயது பெண்ணை 40 வயது கணவனுக்கு பதில் காதலனுடன் வாழ அனுமதித்த ஐகோர்ட்.. சௌரியா டிடியின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், 19 வயதுப் பெண் ஒருவரை, காதலனுடன் சேர்ந்து வாழ அனுமதி அளித்ததுடன், அவரது 40 வயது கணவரின் ஆட்கொணர்வு மனுவையும் நிராகரித்தது. தன்னை விட 21 வயது மூத்தவருடனான திருமண வாழ்வில் மகிழ்ச்சியற்று இருந்ததாகவும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே பிரிந்து செல்ல முடிவு செய்ததாகவும் அப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் வயது வந்தவர் என்பதாலும், சட்டவிரோதக் காவலில் வைக்கப்படவில்லை என்பதாலும், அவரது தனிப்பட்ட சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், எங்கு, யாருடன் வாழ வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கவும் அனுமதித்தது. மேலும், அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆறு மாதங்களுக்கு அவரைக் கண்காணிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Why did MP HC allow a 19-year-old woman to live with her lover instead of her 40-year-old husband

40 வயது கணவன்

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் 40 வயதான கணவர், தனது 19 வயது மனைவி சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஹேபியஸ் கார்ப்ஸ் என அழைக்கப்படும் 'ஆட்கொணர்வு மனு' தாக்கல் செய்தார். இந்த மனு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் ஆனந்த் பதக் மற்றும் புஷ்பேந்திர யாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கணவனுடன் வாழ விரும்பவில்லை

இதையடுத்து போலீசாரால் தேடி கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண், தான் யாராலும் கடத்தப்படவில்லை என்றும், தனது கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார். தனது கணவர் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தன்னை விட 21 வயது மூத்தவருடனான திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றும் கூறினார்.

நீதிபதிகள் கருத்து

அந்த பெண்ணின் கணவரும் வாதங்களை முன் வைத்தார். இறுதியாக நீதிபதிகள் கூறும் போது, "மனுதாரரின் வாதங்கள், அந்தப் பெண் மற்றும் நான்காவது எதிர்மனுதாரரின் (அவரது காதலர் அனுஜ்) எண்ணம் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், அந்தப் பெண் அனுஜுடன் (காதலனுடன்) செல்ல விரும்புவது தெரிகிறது. எனவே, இந்த மனு அதன் நோக்கத்தை நிறைவு செய்துவிட்டது. அதன் விளைவாக, அந்தப் பெண் அனுஜுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறார்." என்று கூறினார்கள்.

'சௌர்யா டிடி' நியமனம்

அந்தப் பெண்ணின் நலனைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் ஒரு புதுமையான பாதுகாப்பு முறையைக் கையாண்டது. காதலனுடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தாலும் அவரது நலனைக் கருத்தில் கொண்டு, அரசு வழக்கறிஞர் செல்வி அஞ்சலி கியானானி மற்றும் பெண் காவலர் பாவனா ஆகியோர் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்தப் பெண்ணின் 'சௌர்யா டிடி' க்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்... அவர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்தப் பெண்ணைக் கவனித்துக்கொள்வார்கள், அவருடன் வழக்கமான தொடர்பில் இருப்பார்கள் மற்றும் அவரது நல்வாழ்வை உறுதி செய்வார்கள்." என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சௌர்யா டிடி என்றால் யார்

நீதிபதி ஆனந்த் பதக் ஏற்கனவே ஒரு வழக்கில் சௌர்யா டிடி திட்டத்தை விளக்கினார். "சௌர்யா டிடி என்பவர் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது பெண் காவலர் அல்லது ஒரு தகுதியான நபராக இருக்கலாம். அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து, அவரை மீண்டும் சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திற்குக் கொண்டு வர ஊக்குவிப்பார்கள். இதன் மூலம் அந்தப் பெண் கல்வி கற்கவோ அல்லது கைத்தொழில் பழகவோ தூண்டப்படுவார், இதனால் அவர் எதிர்காலத்தில் தனது சொந்தக் காலில் நிற்க முடியும்." என்று கூறியிருந்தார். நம்மூரில் உள்ள போலீஸ் அக்கா திட்டம் போல் தான் மத்திய பிரதேசத்தில் இருக்கிறது.

விவாகரத்திற்கு பின் திருமணம்

முன்னதாக அந்த 19 வயது பெண் தனது பெற்றோருடன் செல்லவும் மறுத்துவிட்டார். "அவர்கள் எனது நலவிரும்பிகள் அல்ல" என்று நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இதையடுத்து அப்பெண்ணின் காதலன் அனுஜ், அப்பெண் கணவரை விவாகரத்து பெற்ற பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும், அவருக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
இறுதியாக, இது சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்ட வழக்கு அல்ல என்று முடிவெடுத்த நீதிமன்றம், அந்தப் பெண்ணின் தனிநபர் சுதந்திரத்தை நிலைநாட்டியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+