தனிப்பட்ட கருத்து! அண்ணாமலையை நயினார் நாகேந்திரன் "அப்படி" சொன்னது ஏன்? நாராயணன் சொன்ன பரபர விளக்கம்
அதிமுக கூட்டணிக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: அதிமுக கூட்டணி பற்றிய அண்ணாமலையின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சொன்னது ஏன் என்று பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கி உள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் இருக்கும் நிர்வாகிகள் சிலரே கூட அண்ணாமலை கருத்துக்கு எதிராக பதில் அளித்துள்ளனர்.
அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

வணக்கம்
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

என்ன சொன்னார்
அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நயினார் நாகேந்திரன், தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.. தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறி உள்ளார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் யாரும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. அதனால் தனித்து போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுக கூட்டணி பற்றிய அண்ணாமலையின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சொன்னது ஏன் என்று பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கி உள்ளார்.

பேட்டி
இது தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு நாராயணன் திருப்பதி அளித்த பேட்டியில், அதெல்லாம் அண்ணாமலை சொன்னதாக சொல்லப்படும் கருத்துக்கள். அது அண்ணாமலை சொன்ன கருத்துக்கள் கிடையாது. எங்கள் கட்சியின் உள்ளரங்க கூட்டத்தில் நாங்கள் பேசுவது எப்படி வெளியே போகிறது. அப்படி என்றால் அது பொய் என்று தானே அர்த்தம். தேவையின்றி நாங்கள் சொன்னதாக சில கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். நாங்கள் பேசுவதாக ஒரு செய்தியை பரப்பிவிட்டு அதன்பின் அதை பற்றி எங்களிடமே கருத்து கேட்கிறார்கள்.

கூட்டணி
நாங்கள் ஏதாவது கருத்து சொல்லுவோம் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். நாங்கள் என்ன கருத்து சொன்னாலும் அதை வைத்து விவாதம் செய்ய பார்க்கிறார்கள்.நாங்கள் எங்கள் கட்சி கூட்டத்தில் என்ன பேசினோம் என்று சொல்ல முடியாது. இது எங்கள் உட்கட்சி கூட்டம். அதை பற்றி ஊடகங்கள் பேச கூடாது. ஊடகங்கள் இதில் வேண்டும் என்றே திட்டமிட்டு பரபரப்பை உருவாக்க பார்க்கிறது. உள்ளரங்க கூட்டத்தில் என்ன நடந்தது என்று நாங்கள் ஏன் சொல்ல வேண்டும். நாங்கள் என்ன பேசினோம், பேசவில்லை என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்? மீடியா சொல்ல வேண்டியதை சொல்லட்டும். ஆனால் அதை ஆமாம் என்று சொல்லவோ.. இல்லை என்று சொல்லவோ.. விளக்கம் கொடுக்கவோ வேண்டிய அவசியம் கிடையாது.

என்ன சொன்னார்?
நாங்கள் பேசுவதை வெட்டி.. ஒட்டி.. அதை திரித்து பேசுவது அவசியம் கிடையாது. நாங்கள் இப்போது கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது விஷயமே கிடையாது. இப்போது தேர்தல் இல்லை. இது தேர்தல் நேரம் கிடையாது. அதனால் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. திமுக கூட்டணியில் கூடத்தான் பிரச்சனை இருக்கிறது. வெறுமனே பாஜகவை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள்.

திமுக இப்படித்தான்
திமுகவில் இப்படித்தான் நடக்கிறது. திருமா திமுகவை எதிர்த்து பேசுகிறார். அதேபோல் கம்யூனிஸ்ட் திமுகவை எதிர்த்து பேசுகிறது. அப்படி இருக்கும் போது திமுக கூட்டத்தை பற்றி எல்லாம் இங்கே யாரும் பேசுவது இல்லையே. அதை பற்றியும் பேசுங்கள். நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம் என்பது.. அண்ணாமலை அப்படி சொல்லி இருந்தால்.. ஒருவேளை சொல்லி இருந்தால் அது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து என்றுதான் கூறினார். மற்றபடி நயினார் நாகேந்திரன் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. அண்ணாமலை சொல்லி இருந்தால் மட்டுமே அது தனிப்பட்ட கருத்து என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை அப்படி சொன்னதாக நயினார் உறுதிப்படுத்தவில்லை, மற்றபடி எந்த மோதலும் எங்கள் கட்சிக்குள் இல்லை, என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications