"அமைதியா இருங்க".. திடீரென இரவோடு இரவாக.. ஓபிஎஸ் ஏன் "அப்படி" சொல்லணும்! பின்னணியில் மாஸ்டர் கேம்!
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்காக பல்வேறு களேபரங்கள், மோதல்கள் நடந்து வரும் நிலையில்தான்.. ஓபிஎஸ் மூன்றாவது நாளாக இன்று முக்கியமான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பும்.. நேற்று அவர் செய்த ட்விட்டிற்கு பின்பும் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக முயன்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதை பற்றி ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் பலர் ஒற்றை தலைமை வேண்டும்.. எடப்பாடியைத்தான் அந்த பதவியில் அமர வைக்க வேண்டும் என்று நேற்று நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
ஆனால் ஓ பன்னீர்செல்வம் இதை விரும்பவில்லை. ஒற்றை தலைமை கூடாது.. அப்படியே வந்தாலும் அந்த பதவி தனக்குத்தான் வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

சமாதானம்
இந்த நிலையில் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க எடப்பாடி டீம் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறதாம். இதற்காக ஆர்பி உதயகுமார், காமராஜ் ஆகியோர் அவரிடம் ஆலோசனை செய்து வருகின்றனர். உங்களுக்கு அவைத்தலைவர் பதவி கொடுக்கிறோம். உங்கள் இரண்டு மகனுக்கும் பதவி கொடுக்கலாம். நீங்கள் ராஜினாமா செய்யுங்கள் என்று அழுத்தம் தந்து வருகிறார்களாம்.

3வது நாளாக முயற்சி
ஆனால் ஓபிஎஸ்ஸோ.. முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தேன்.. தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தேன்.. எதிர்க்கட்சி தலைவர் பதவியும் இல்லை. இப்போது இதையும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூட்டத்தில் சொல்லி இருக்கிறாராம்! இதனால் அவரை சமாதானம் செய்ய முடியாமல் நிர்வாகிகள் திணறி வருகிறார்களாம். இதனால்தான் இன்று மூன்றாவது நாளாக அவரை சமாதானம் செய்யும் விதமாக கூட்டம் நடந்து வருகிறது.

வெளியே ஆதரவு போஸ்டர்
இது ஒரு பக்கம் இருக்க ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்னை முழுக்க ஒற்றை தலைமையே என்று போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மூலம் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் தனக்குதான் ஆதரவு இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கி தொண்டர்களை தன் பக்கம் இழுக்கும் கேமை ஓபிஎஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தனக்கே அதிக ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்ள அவர் முயன்று வருகிறார்.

போஸ்ட் செய்தார்
அதற்குத்தான் இந்த போஸ்டர் ஒட்டும் வேலைகள் எல்லாம் நடக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர். இந்த நிலையில்தான் நேற்று இரவோடு இரவாக ஓ பன்னீர்செல்வம் முக்கியமான ட்விட் ஒன்றை செய்தார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த ட்விட்டிற்கு பின்பும் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

ஏன்
அதன்படி தொண்டர்களிடம் இன்னும் கட்சி என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ளும் விதமாக அவர் இப்படி போஸ்ட் செய்துள்ளார். அந்த கமெண்டில் பார்த்தாலே அவருக்கு ஆதரவாக பலர் பேசி உள்ளது தெரியும். சமூக வலைத்தளங்களில் அதிமுகவினரை தன் பக்கம் இழுக்கும் விதமாக அவர் இப்படி செய்கிறார். தனக்கு ஆதரவை அதிகபட்சம் எல்லா பக்கத்திலும் இருந்து திரட்டுவதற்கு அவர் முயன்று கொண்டு இருக்கிறார் என்று தெரிவிக்கிறார்கள் தேனி வட்டாரத்தினர்.

நான்தான் கண்ட்ரோல்
அதோடு பொதுச்செயலாளர் பதவியை அவ்வளவு எளிதாக எடப்பாடிக்கு ஓபிஎஸ் கொடுக்க மாட்டார். மற்ற விஷயங்களை போல இதை அவர் விட்டுக்கொடுக்க மாட்டார். முடிந்த அளவு அவர் முட்டி மோதுவார். அதற்காகதான் இப்படி போஸ்டர் ஒட்டுவது, ட்விட் போடுவது, மீட்டிங் போடுவது என்று தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால் இதெல்லாம் பொதுக்குழு, செயற்குழுவில் அவருக்கு உதவுமா என்று தெரியாது.. அங்கு நிர்வாகிகள் பேசுவதை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்று தெரியாது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications