ரஜினிகாந்த்திடம் ஓடோடிய ஓபிஎஸ்.. சூட்டோடு சூடா.. அதைவிடுங்க.. தனிக்கட்சி? தெருவுல நிறுத்த போறீங்களா?
சென்னை: ஓபிஎஸ் திடீரென எதற்காக ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார்? என்ற யூகங்கள் ஒருபக்கம் வலுத்து வரும்நிலையில், ஓபிஎஸ் துவங்குவதாக சொல்லப்படும், அவரது தனிக்கட்சி குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
பொதுக்குழு தீர்ப்பு சமீபத்தில் வந்திருந்த நிலையில், ஓபிஎஸ் & டீம் பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்பாக அப்பீலுக்கு இனி போனாலும்கூட, சிவில் வழக்குகளில் உடனே தீர்ப்புகள் வரப்போவதுமில்லை.

அதனால்தான், "அம்மா திமுக" என்ற தனிக்கட்சி என்ற யோசனைக்கு ஓபிஎஸ் வந்ததாகவும், பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டதாகவும் செய்திகள் பரபரத்தன.
தனிக்கட்சி: இதற்கு ஓபிஎஸ்ஸிடம் அவரது ஆதரவாளர்கள் சில காரணங்களையும் எடுத்து சொன்னார்களாம்.. எடப்பாடிக்கு சாதகமாகவே டெல்லி நடந்து கொள்ளும். தேர்தல் வரை நாம் எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டே வந்து, கடைசி நேரத்தில் நம்மை கழட்டிவிட்டுவிட்டு, எடப்பாடியிடம் கைக்கோர்ப்பார்கள் பாஜகவை நம்பி வீணாக வேண்டாம், நாம் தனியாக களமிறங்குவோம் என்றார்களாம்.
இப்படிப்பட்ட சூழலில்தான், "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை விவகாரம் தூக்கி வருகிறது. இதற்கு முதல் நபராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு தந்துள்ளார்.. தமிழக முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பை பதிவு செய்த எடப்பாடி, இப்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஆதரவும் தெரிவித்துள்ளார்.

பாஜக: இதன்மூலம், திமுக ஆட்சிக்கு செக் வைப்பதுடன், பாஜகவுடனான தன்னுடைய நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்தி கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள். நேற்று எடப்பாடி ஆதரவு தெரிவித்த நிலையில், இன்றைய தினம் ஓ.பன்னீர்செல்வமும், "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார். இந்த ஆதரவை தெரிவித்த கையோடு, போயஸ் கார்டனில் ரஜினிகாந்த்தையும் சென்று சந்தித்துள்ளார். ஜினிகாந்த்திடம் ஓடோடிய ஓபிஎஸ்
எதற்காக இந்த சந்திப்பு? நாளைய தினம் எழுச்சி பயணத்தை ஆரம்பிப்பதாக சொல்லி வரும்நிலையில், திடீரென ரஜினியை ஏன் ஓபிஎஸ் சந்தித்து பேச வேண்டும்? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.. இது தொடர்பாக 2 விதமாக தகவல்களும் கிடைத்துள்ளன.
தனிக்கட்சியா? நாளைய தினம் ஓபிஎஸ், தனிக்கட்சி ஆரம்பிக்க போவதால்தான், ரஜினியின் ஆதரவை பெறுவதற்காக இந்த சந்திப்பை நடத்தியதாக சொன்னார்கள்.. ஆனால், உண்மை அதுகிடையாதாம்..
பொதுக்குழு முடிவுக்கு பிறகு, அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தனிக்கட்சி தொடங்கலாம் என்று சிலர், ஓபிஎஸ்ஸுக்கு ஐடியா கொடுத்து இருக்கிறார்கள்.. அதைக்கேட்ட ஓபிஎஸ், தனிக்கட்சியா? அப்படி ஆரம்பித்தால் நமக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லைன்னு நாமே ஒதுக்கியதுபோல் ஆகிவிடுமே.. இந்த மாதிரி தெருவுக்கு போகும் வழிகளை சொல்லாதீங்க" என்று கறாராக சொல்லிவிட்டாராம்.

அந்தவகையில், தனிக்கட்சியை ஓபிஎஸ் ஆரம்பிக்கவில்லையாம்.. ஆனால், கூட்டணியில், தன்னை ஒதுக்கிவிடும் மனப்பான்மைக்கு பாஜக வந்தாலும் ஆச்சரியமில்லை என்பதால், அந்த கலக்கத்தை ரஜினியிடம் பகிர்ந்து கொண்டதாகவும், இதைத்தவிர, சில அரசியல் விவகாரங்கள் பேசப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
ரஜினி அரசியல்: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், ஏற்கனவே ஒருமுறை ஓபிஎஸ் பேட்டி தந்திருக்கிறார்.. அந்தவகையில், எப்போதுமே ரஜினியுடன் பன்னீருக்கான இணக்கம் தொடர்ந்து வருகிறது.
மற்றொருபுறம், பாஜக மேலிட தலைவர்களிடம் ரஜினி எந்நேரமும் நெருங்கியிருக்கும் சூழலில், அதுவும் இந்த முறை எம்பி தேர்தலில் ரஜினியின் பங்களிப்பு ஓரளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில், அவருடனான ஓபிஎஸ்ஸின் இந்த சந்திப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவாரா? மாட்டாரா? எதுவானாலும் நாளை தெரிந்துவிடும்..!!!
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications