எல்லா சாலையும் கமலாலயத்தை நோக்கி! மோடி பண்ணதை பார்த்தீங்களா! முக்கிய தமிழக "புள்ளியை" தூக்கும் பாஜக?
சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் உலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. நேற்று இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
அதேபோல் இதற்கு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் கடுமையான பதிலடியை கொடுத்து இருக்கிறார். இந்த சந்திப்பில் வேறு சில சுவாரசிய சம்பவங்களும் நடைபெற்றன.
உதாரணமாக சென்னை பழைய விமான நிலையத்தில்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி வாஞ்சையாக தடவி.. வணக்கம் சொன்னார். எடப்பாடி பழனிச்சாமி தோளை தட்டி பாராட்டினார்.

இன்னொருவர் சந்திப்பு
ஆனால் இதே சந்திப்பில் பிரதமர் மோடி இன்னொருவரிடமும் நெருக்கமாக பழகினார். அது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன். விமான நிலையத்தில் வரிசையில் காத்து இருந்த பிரதமர் மோடியிடம் ஜிகே வாசன் வணக்கம் வைத்தார். அப்போது பிரதமர் மோடி ஜிகே வாசனை சந்தித்ததும்.. முகம் முழுக்க மகிழ்ச்சியை காட்டி அவரின் தோளையும் தட்டிக்கொடுத்தார். அவரை பாராட்டி.. வணக்கம் வைத்து அங்கிருந்து நகர்ந்தார்.

ஜிகே வாசன்
அங்கு லைனில் இருந்தவர்களிடத்தில் ஜிகே வாசனிடம்தான் பிரதமர் மோடி அதிக நெருக்கம் காட்டினார். மோடியின் இந்த செயல் ஏற்கனவே தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தீயாக இருக்கும் ஒரு விவகாரத்தில் மேலும் டீசலை ஊற்றி உள்ளது. அது என்ன விவகாரம் என்று பார்க்கலாம்... பொதுவாகவே ஜிகே வாசனிடம் பிரதமர் மோடி அன்பாக இருக்க கூடியவர். அரசியல், கூட்டணி இதெல்லாம் கடந்து வாசனை பலமுறை மோடி அன்பாக பொது இடங்களில் நடத்தி இருக்கிறார்.

சந்திப்பு
இந்த அன்பிற்கும்., இணக்கத்திற்கும் இடையில்தான் பிரதமர் மோடியை தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே.வாசன் கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லி சென்று இருந்தார். டெல்லியில் திடீரென பிரதமர் மோடியை சந்தித்தவர் நீண்ட நேரம் அவரிடம் ஆலசோனை செய்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் நடந்த இந்த சந்திப்பில் தனக்கு ராஜ்யா சபா எம்பி பதவி மூலம் அமைச்சரவை பதவி வழங்க வேண்டும் என்று வாசன் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது. இதை பற்றி அப்போதே ஒன் இந்தியா சார்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

வாசன் கோரிக்கை
அதாவது தனி பொறுப்பு உள்ள இணை அமைச்சர் பதவி ஒன்றை வாசனுக்கு வழங்க பாஜக தலைமையும், பிரதமர் மோடியும் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு பிரதமர் தரப்பு வைத்த கண்டிஷன், த.மா.காவை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்பதுதான் என்று கூறப்படுகிறது. அதாவது கட்சியை பாஜகவுடன் இணைத்துவிடுங்கள்.. மாநில அளவில் உங்களுக்கு முக்கிய பொறுப்பும் கொடுக்க முடியாது.. ஏனென்றால் ஒருவருக்கு ஒரு பதவிதான்.. ஆனால் அமைச்சர் ஆக்குகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

முடிவு எடுக்கவில்லை
ஆனால் வாசனுக்கு நெருக்கமாக இருக்கும் தமாகா கட்சியினர் சில மூத்த தலைகள்.. கட்சியை இணைக்க வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வந்தன. தனியாகவே இருக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரசை பாஜகவுடன் இணைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லையாம். இந்த நிலையில்தான் நேற்று பிரதமர் மோடியை ஜிகே வாசன் நேரில் சந்தித்து இருக்கிறார். மோடியும் வாசனை ஆரத்தழுவி இருக்கிறார்.

விவாதம்
இதனால் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமலாலயத்தை நோக்கி நகர்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில்தான் ஆளுனர் ஆர். என் ரவியை ஜிகே வாசன் சந்தித்தார். சிதம்பரம் நடராஜரை விமர்சனம் செய்த யூ டியூபரை கைது செய்ய இந்த சந்திப்பில் வாசன் கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த சந்திப்பில் இதை தாண்டி பல அரசியல் விவகாரங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு நடந்து இரண்டு நாட்களில்தான் பிரதமர் மோடியை வாசன் சந்தித்து இருக்கிறார்.

வாசன் ஏன்?
நேற்று பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், மேயர் இருந்த வரிசையில் வாசனும் இருந்தது கவனத்தை ஈர்த்தது. மோடி ஆலோசனை - ஆளுநர் மீட்டிங் - மீண்டும் மோடியுடன் சந்திப்பு என்று வாசனின் ஒவ்வொரு செயல்களும் அவரின் பாதைகள் எல்லாம் கமலாலயத்தை நோக்கி செல்கிறதோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதோடு இன்று திமுகவையும், முதல்வர் ஸ்டாலினின் பேச்சையும் கடுமையாக அவர் விமர்சனம் செய்து இருப்பது.. பாஜக - தமாகா இணைப்பிற்கு அவர் தயாராகிவிட்டாரோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications