அடங்கிய அனல்.. திமுகவை "கூல்" செய்ய ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தது ஏன்? மோடி போட்ட மாஸ்டர்பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இவரை அனுப்பி வைத்ததே மோடிதான் என்கிறார்கள். இதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன.

இந்திய அரசியல் பல எதிர்பார்க்காத திருப்பங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. நொடிக்கு நொடி பல ஆச்சர்யமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. மாநில கட்சிகளே வேண்டாம். மாநில கட்சிகளை அழித்து ஒழிப்போம் என்று கூறி சுற்றிக்கொண்டு இருந்த பாஜக அதே மாநில கட்சிகளிடம் மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

karunanidhi m k stalin annamalai

தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இவர்களின் ஆதரவோடுதான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.

மைனாரிட்டி ஆட்சி: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி நீடிக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

மாநில கட்சிகளின் ஆதரவு; 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் மைனாரிட்டி ஆட்சி அமைத்து இருக்கும் பாஜக எப்படியாவது மற்ற மாநில கட்சிகளின் உதவிகளை பெற தீவிரமாக துடித்துக்கொண்டு இருக்கிறதாம். முக்கியமாக திமுகவின் 21 எம்பிக்கள், திரிணாமூல் காங்கிரசின் 47 எம்பிக்கள் ஆகியோரின் உதவியை நாட பாஜக திட்டமிட்டு வருகிறதாம். இதற்கு பின் இரண்டு காரணங்கள் உள்ளன. 1. ஜெயலலிதா. 2 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.

ஜெயலலிதா சம்பவம்: 1999ல் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்கு ஜெயலலிதாவிற்கு இருந்தது. தற்போது மோடி மைனாரிட்டி அரசை நிறுவும் நிலையில் அந்த நேரத்தில் நடந்த விஷயங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஜெயலலிதா எங்கள் வீட்டிற்கு வந்தார். பாஜக நிர்வாகிகள் இங்கே இருந்தனர். நாங்கள் எல்லாம் உணவு சாப்பிட்டோம். திமுக ஆட்சியின் கீழ் விசாரிக்கப்படும் வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி சொன்னார்.

அதன்பின் அவர் தன்னுடைய ஹோட்டலுக்கு போனார். ஆனால் அங்கே திடீரென அரசியல் பூகம்பம் என்று கூறினார். அதோடு நிற்காமல் வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கினார். அப்போது வாஜ்பாய் சொன்னது.. இந்த ஆட்சியில் நான் பிரதமராக சந்தோசமாக இருந்ததை விட அதிக அழுத்தத்தையே உணர்ந்தேன். நான் பட்ட அழுத்தங்கள் மிக அதிகம் என்று கூறி ஆட்சியை விட்டு விலகினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா வாஜ்பாய் ஆட்சியை ஆட்டு வித்தார்.

மோடி பிளான்: இப்படிப்பட்ட நிலையில்தான் கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இவரை அனுப்பி வைத்ததே மோடிதான் என்கிறார்கள்.

இதில் பாஜக தலைவர் அண்ணா மலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர். பாஜக இப்படி திமுகவுடன் நெருக்கமாக இருக்க வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவை கூல் செய்ய முடிவு: கடந்த முறை கருணாநிதி சிலையை திறக்க.. அப்போதைய துணை ஜனாதிபதி வெங்காய நாயுடுவை அழைத்தார் ஸ்டாலின். அதேபோல் இந்த முறை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை அழைக்கவே ஸ்டாலின் திட்டமிட்டார். இதற்காக ஸ்டாலின் டெல்லியிடம் பேசி உள்ளார். ஆனால் 1 வாரமாக அதற்கான பதில் கிடைக்கவில்லை.

அதன்பின் டெல்லியே முடிவு எடுத்து அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்துள்ளார்களாம் . இதன் மூலம் திமுகவை கூல் செய்யலாம்.. அமைச்சர் வந்து கருணாநிதியை புகழ்ந்தால் திமுகவின் கோபம் தணியும். இதன் மூலம் பாஜகவிற்கு மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லை.. முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற பாஜகவிற்கு திமுக உதவும் என்று டெல்லி நம்புகிறதாம்.

அதனால்தான் இந்தியாவின் எதிர்காலத்திற்கு கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை முக்கியம்.. என்று மோடி புகழ்ந்தார். ராஜ்நாத் சிங்கும் கருணாநிதியை அதிகமாக புகழ இதுவே காரணம் என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+