Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் சார்பா நீங்க போங்க.. ஸ்டாலினிடம் முக்கிய பொறுப்பை கொடுத்த மோடி.. ஷாக் ஆகி நின்ற எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் சென்னையில் காலமானார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இரங்கல் தெரிவித்தார். பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை.

1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்தவர் மறைந்த இல. கணேசன். சிறுவயதிலேயே தந்தையை இழந்து, பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈர்ப்பு கொண்டு அதில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேரச் செயல்பாட்டாளராக இயங்க ஆரம்பித்தார். திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்விற்கு தனது வாழ்வை அர்ப்பணித்த இல. கணேசன், பாஜகவில் இணைந்து செயலாற்றினார்.

La Ganesan Narendra Modi

இல.கணேசன் - மோடி நேரில் வர முடியவில்லை

தீவிர ஆர்.எஸ்.எஸ் பாஜககாரர் என்றாலும் கூட மோடி நேரில் வர முடியவில்லை. இந்த நிலையில் பிரதமர் சார்பில் இல.கணேசனுக்கு மரியாதை செலுத்த முதல்வர் ஸ்டாலினை டெல்லி கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி சார்பில் இல.கணேசனுக்கு ஸ்டாலின் மலர்வளையம் வைத்ததை மற்றும் நேரில் அஞ்சலி செலுத்தியதை எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் ரசிக்கவில்லை. மோடி ஏன் ஸ்டாலினிடம் இந்த செயலை செய்ய சொல்லி கொடுத்தார்.. வேண்டுமானால் கூட்டணி தலைவர் என்னிடம் கொடுத்திருக்கலாம்.. அல்லது கட்சி தலைவர் நயினாரிடம் கொடுத்திருக்கலாம் அல்லது மூத்தவர் மத்திய இணையமைச்சர் என்ற முறையில் எல் முருகனிடம் கொடுத்திருக்கலாம்.

La Ganesan Narendra Modi

மோடி ஏன் ஸ்டாலினிடம் இந்த செயலை செய்ய சொன்னார் .. டெல்லியில் என்ன நடக்கிறது என விசாரிக்குமாறு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்தை எடப்பாடிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதே போல, பிரதமர் சார்பில் ஸ்டாலின் மரியாதை செலுத்தியதை பாஜகவிலும் பலர் விரும்பவில்லை. பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகனை பிரதமர் சார்பில் மரியாதை செலுத்த வைத்திருக்கலாம் என்ற ஆதங்கம் கமலாலயத்தில் எதிரொலிக்கிறது. முருகனுக்குக்கூட இதில் அதிருப்தி என்கின்றனர்.

மோடி ஸ்டாலின் நட்பாகிவிட்டார்களா?

மோடி - ஸ்டாலின் திடீரென நட்பாகிவிட்டார்களா.. என்னங்க நடக்குது என்ற குரல் திமுக - பாஜக உள்ளே தீவிரமாக எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.

La Ganesan Narendra Modi

இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர். நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர்.

மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது, திரு. கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, என்று இரங்கலில் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+