தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்?
சென்னை: திமுக இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி தான் தருவோம்.. அதற்கு மேல் தர முடியாது என்பதில் பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை வெளிப்படையாகவே காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். இந்த சூழலில் தவெக ஆட்சியில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி காங்கிரஸை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வந்தது. இதனை ஒரு தரப்பு காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்றுள்ளனர். ஆனால் நேற்று காங்கிரஸ பொதுச்செயலாளர் வேணுகோபால் போனில் பேசிய போது, திமுக கூட்டணி தான் வேண்டும் என்று பல காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினார்களாம்.
1967ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், அதன்பிறகு மீளவே இல்லை...கடைசியாக 1989ம் ஆண்டு காங்கிரஸ் மூப்பனார் தலைமையில் மிகப்பெரிய வெற்றியை தனித்து நின்று 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதன்பிறகு ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அலையில் அதிமுகவிடன் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது 60 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மட்டுமே அப்போது நாடாளுன்ற தொகுதியை பொறுத்தவரை 28 தொகுதிகளில் வென்றது. ஆனால் அந்த கூட்டணி 1996ல் வெல்லவில்லை.. 2004ம் ஆண்டில் இருந்ததான் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு திமுக வந்தது.
2004 முதல் 2021 வரை
கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சோனியா காந்தி உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரசுடன் தி.மு.க. இணைந்து வந்தது அன்று முதல் இன்று வரை 22 ஆண்டுகளாக (2014 நாடாளுமன்ற தேர்தல் தவிர்த்து) இந்த கூட்டணி இருக்கிறது.
2011 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியது. 2016 சட்டமன்ற தேர்தலின் போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்து 41 ஆனது. 2021-ம் சட்டமன்ற தேர்தலில், கட்டெறும்பு தேய்ந்த கதையாக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டது.
தவெக செய்த குழப்பம்
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் காண்கிறது. த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் அளிக்கப்படும் என்று விஜய் ஆஃபர் கொடுத்தார். விஜய்யின் அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.
35 தொகுதி வேண்டும் என பிடிவாதம்
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும்" என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டிற்கு சரிப்பட்டு வராது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாட்டில் இருந்து கிரிஷ் சோடங்கர் பின்வாங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 35 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
தவெகவை அங்கீகரிக்கிறோம்
தி.மு.க.வுடன் நடைபெற்ற தொகுதி பங்கீட்டில் இதை வலியுறுத்தினார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாம். இதனால் அதிருப்தியடைந்த கிரிஷ் சோடங்கர் டெல்லியில் நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியில், "தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று திட்டவட்டமாக கூறினார். மேலும் காங்கிரசின் பலத்தை த.வெ.க. அங்கீகரிக்கிறது என்ற அதிரடி கருத்தையும் தெரிவித்தார்.
ராஜ்யசபா எம்பி பதவி தர தயார்
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்குவதற்கு தி.மு.க. முன் வந்துள்ளது. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுதினம் முடிவடைய இருக்கிறது. தி.மு.க. ஒதுக்கும் 25 தொகுதிகளை பெற்றுக் கொண்டு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தால்தான் இந்த மேல் சபை பதவியிடம் கிடைக்கும் என்பதால் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
ராகுல் காந்தி வைத்த வேண்டுகோள்
இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றார்கள். இதில் தி.மு.க. தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மனநிலை என்ன? என்பதை கேட்டறிந்து தன்னிடம் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கே.சி.வேணுகோபாலை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டாராம்.
எம்பிக்களின் விருப்பம்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்களும், 9 எம்.பி.க்களும் உள்ளார்கள். இவர்கள் அனைவரையும் போனில் கே.சி.வேணுகோபால் தொடர்பு கொண்டு கருத்து கணிப்பு நடத்துவது போல் அவர்களது கருத்துகளை கேட்டறிந்துள்ளார்.அப்போது பல எம்பி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார்களாம்.
ப சிதம்பரம் செல்வது ஏன்
இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு நிலவரம் குறித்து அறிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூனா கார்கே, வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். ஆலோசனை ஒருபுறம் எனில் ப சிதம்பரம் திமுக கூட்டணி குறித்து முதல்வரை சந்தித்து பேசுகிறார்.இதில் உடன்பாடு ஏற்பட்டால் கூட்டணி தொடரும் என தெரிகிறது. ஸ்டாலின் மற்றும் ப சிதம்பரம் இடையே நல்ல நட்பு உள்ளதால், அவரை ராகுல் அனுப்பினாராம். பேசியும் முடித்துள்ளார்கள். நல்ல முடிவு விரைவில் வரும் என்கிறார்கள் திமுக ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications