ராஜேஸ்வரி பிரியா விடலயே.. வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் ஏஜென்ட்டு? தமிழக அரசுக்கு கோரிக்கை
சென்னை: வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்கள், போலி ஏஜண்டுகளால் அனுப்பப்படுவதுடன், வேலையில்லாமல் அண்டை நாடுகளில் அவதிபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக போலி ஏஜண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் கருதி, ராஜேஸ்வரி பிரியா ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.. அதில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.

போலி ஏஜெண்டுகள்: "தமிழ்நாடு அரசு உடனடியாக போலி ஏஜண்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ன செய்து கொண்டுள்ளது? போலி ஏஜண்டுகள் ஒழிக்கப்படும் என்பது வெற்று அறிக்கையா? வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க அமைச்சகம் வாரியம் அமைக்க பட்டாலும் அது வெறும் கண்துடைப்பாக தான் உள்ளது
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தினமும் வெளிநாடு வாழ் தமிழர்கள் கண்ணீர் வடிக்கும் அவல நிலை தொடர்கதையாக சிந்துபாத் கன்னித்தீவு போல தொடர் கதையாக உள்ளது
மாலத்தீவு: வெளிநாடுகளுக்கு குறிப்பாக மாலத்தீவு, மலேசியா, வளைகுடா நாடுகளான சவுதி, கத்தார்,துபாய்,குவைத், பஹ்ரைன், ஓமன் போன்ற நாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் போலி ஏஜண்டுகளால் அனுப்பப்பட்டு, சொல்லும் வேலை இல்லாமல் அவதிபடும் அவல நிலையை கொடுமையை நான் குவைத் சென்ற நேரத்தில் கண்டேன் அதிர்ச்சியுற்றேன்
இன்று வரை அரசு ஏஜண்டுகள் குறித்து முறையாக மக்களுக்கு அறிவிக்கவில்லை.. கடன் பட்டு வட்டிக்கு வாங்கி வேலைக்கு வெளிநாடு செல்லும் தமிழர்கள் முறையாக அரசில் பதிவு செய்து செல்லும் நடைமுறை இல்லை.. வெற்று அறிக்கைகள் தான் வருகிறதே தவிர மக்களுக்கு பயன்படும்படி ஏதும் இல்லை
உண்மைத்தன்மை: விசா குறித்து அறிய அதன் உண்மை தன்மை அறிய எந்த ஏற்பாடும் இல்லை மக்களுக்கான எந்த வழிகாட்டலும் இல்லை.. காரணம் யார் உண்மையான ஏஜண்ட் போலியான ஏஜண்ட் என மக்களுக்கு தெரியவில்லை.. ஒரு ஏஜண்ட்டின் லைசன்ஸ் வைத்துக் கொண்டு பல ஊர்களில் போலியாக ஏஜண்ட்டுகள் அதன் பெயரில் உலா வருவது காண முடிகிறது.. இவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பும் நபர்களுக்கு பிரச்சினை என வரும்போது கட்சியினரை வைத்து தப்பித்துக் கொள்ளும் அவலமும் நடக்கிறது
பல இலட்ச ரூபாய் பெற்று கொண்டு வேலைக்கு அனுப்பிய பின்பு அங்கு சொல்லி அனுப்பிய வேலை இல்லை ஏமாற்ற பட்டு விட்டோம் என ஊருக்கு அனுப்பிட கேட்கும் போது, அந்த முதலாளி நான் ஏஜண்டுக்கு பணம் கொடுத்துள்ளேன், லட்ச ரூபாய் வைத்து விட்டு செல் என சொல்லும் கேவலம் நிலவுகிறது .. மீறினால் சிறைவாசம் என மிரட்டப்படுகிறது
முதலாளி: இன்னும் கூடுதல் தகவலாக அந்தந்த நாட்டில் பணிபுரியும் தனி நபர்கள் முதலாளியிடம் பேசி பணத்திற்கு ஆசைப்பட்டு விசா பெற்று அனுப்பும் சூழல் அதிகமாக உள்ளது. அதிலும் வளைகுடா நாடுகளில் காதிம் விசா இவ்வாறு தரப்படுகிறது இதில் பிரச்சினை வரும்போது விசா எடுத்து கொடுத்த நபர் கை விரித்து விடுகிறார். இதனால் பலர் துன்பத்திற்கு ஆளாகின்றனர். தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கே செல்கின்றனர்
ஆதலால் அரசு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்கிறோம் என்ற வெற்று அறிக்கை விடாமல், முறையாக அரசின் வெப் தளத்தில் முறைபடுத்தப்பட்ட ஏஜண்டுகள் யார் என்பதை பதிவிட வேண்டும்.. தனி நபர்கள் விசா எடுத்து அனுப்புவதை தடை செய்ய வேண்டும்
வெளிநாட்டிற்கு அனுப்பிடும் ஏஜண்டுகளே பிரச்சினை என வரும் தமிழர்களுக்கு அவர்கள் மூலமாகவே தீர்வு கண்டிட வேண்டும். ஏஜன்டுகளே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், வெளிநாடு செல்லும் தமிழர்களிடத்தில் வெற்று காகிதத்திலும் சில பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கிய பின்பே வெளிநாடு அனுப்பப்படுகிறார்கள்.. தற்போது சவுதியில் தமிழகத்தை சேர்ந்த செவிலியர் இரண்டு பெண்கள் பரிதவித்து வருவது குறிப்பிடத்தக்கது..
வேண்டுகோள்: ஆதலால் முறையான விசா மூலம் வெளிநாடு சென்றால் அவசர காலங்களில் இந்திய தூதரக வழிகாட்டலில் சிரமமின்றி தாயகம் வர வழியுண்டு என்பதை உணர்ந்து அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்... ஏமாற்றும் போலி ஏஜண்டுகள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications