ஆஹா! சட்டென "டோனை" மாற்றிய சசிகலா! பண்ருட்டி ராமச்சந்திரனை பார்த்தது ஏன்? வலையில் சிக்கும் மீன்?
சென்னை: அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக மீண்டும் ஒன்றாக இணையும் என்று சசிகலா கூறி இருக்கிறார். நேற்று பண்ட்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த பின் பேசிய சசிகலா மிகவும் நம்பிக்கையாக காணப்பட்டார்.
ஒரு காலத்தில் திமுகவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் பண்ட்ருட்டி ராமச்சந்திரன் அதன்பின் அதிமுகவில் சில காலம், பின்னர் பாமகவில் சில காலம் என்று அரசியல் ரீதியாக வெவ்வேறு கட்சிகளில் செயலாற்றி வந்தார்.
கடைசியாக தேமுதிகவில் அதன் தொடக்க காலத்தில் இருந்து இருந்தவர்.. இப்போது வயோதிகம் காரணமாக பெரிதாக அரசியல் உலகில் ஆக்டிவாக இல்லை.

தேமுதிக
இந்த நிலையில்தான் நேற்று திடீரென சென்னையில் அதிமுக முன்னாள் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தார். ராமசந்திரன் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் மோதல்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் சில விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பு
இந்த நிலையில் இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுக என்பது ஒருவரின் சொத்து கிடையாது. அது ஒரு நிறுவனம் கிடையாது. அது யாருக்கும் சொந்தமானது கிடையாது. அது அனைவருக்குமானது. அது தொண்டர்களுக்கான கட்சி. 50 ஆண்டுகளாக இந்த கட்சி இருக்க இதுவே காரணம்.

கடமை
அதை மீண்டும் நிலை நிறுத்துவதே எங்களின் கடமையும் கூட. அதை மீண்டும் செய்ய வேண்டும். 2 தலைவர்களும் அதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதை நான் நிச்சயம் செய்வேன். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்பது திடமான நம்பிக்கை. இதற்கு முன்பே தலைவர்களின் மறைவின் போது இப்படி நடந்து உள்ளது. பின்னர் கால போக்கில் எல்லாம் சரியாகி உள்ளது.

சசிகலா
அது போலவே மீண்டும் நடக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் எல்லாம் சரியாகிவிடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக இணையும். நான் யார் பக்கமும் இல்லை. தொண்டர்களின் விருப்பப்படியே செயல்பட்டு வருகிறேன், என்று சசிகலா குறிப்பிட்டார். நேற்று சசிகலா பேட்டி அளிக்கும் போது மிகவும் தெளிவாக காணப்பட்டார். எப்போது செய்தியாளர் சந்திப்பில் உறுதியாக சில விஷயங்களை சொல்ல முடியாமல் யோசிப்பவர் நேற்று மிகவும் உறுதியாக காணப்பட்டார்.

உறுதி
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கண்டிப்பாக அதிமுக ஒன்றாக இணையும் என்று அடித்து கூறினார். சசிகலா இப்படி திடீரென நாள் குறிக்க என்ன காரணம்? அவர் பண்ட்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்திக்க என்ன காரணம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசிய சசிகலா ஆதரவாளர்கள் சிலர்.. சசிகலாவின் இந்த குறிப்பிட்ட சந்திப்பிற்கு பின் மரியாதை மட்டும் காரணம் அல்ல. வேறு சில காரணங்களும் உள்ளன.

ஆலோசனை
சில முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதற்காக சசிகலா சென்றார். அதிமுகவில் விரைவில் கிளைமேக்ஸ் வர போகிறது. அதற்கு முன் சில விஷயங்களில் ஆலோசனை பெறுவதற்காக சசிகலா இந்த சந்திப்பை நடத்தி இருக்கிறார். சசிகலா இத்தனை காலம் அமைதியாக இருந்தார். ஆனால் இனி அடித்து ஆடுவார். கட்சியில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதை சிலர் விரும்பவில்லை. கொங்கு மண்டல நிர்வாகிகள் சிலரே இதை விரும்பவில்லை.
Recommended Video

பேசிக்கொண்டு இருக்கிறார்
அவர்களுடன் சசிகலா தொடர்பில்தான் இருக்கிறார். விரைவில் சில "மீன்கள்" சசிகலா பக்கம் வந்துவிடும் என்று உறுதியாக சொல்கிறார்கள். அதனால்தான் சசிகலாவிடம் எப்போதும் இல்லாத நம்பிக்கை இப்போது பேச்சில் தெரிகிறது என்றும் அப்டேட் கொடுக்கிறார்கள். நேற்று பண்ட்ருட்டி ராமச்சந்திரனை பார்த்த சசிகலா இன்றும் சில முக்கிய முன்னாள் அதிமுக நிர்வாகிகளை சந்திப்பார், அவர்களுடன் ஆலோசனை செய்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications