கொத்து கொத்தாக.. எடப்பாடி பக்கம் தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. பின்னணியில் "மெகா" காரணம்! எல்லாம் ஓவர்?
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இருந்து நிர்வாகிகள் வரிசையாக எடப்பாடி அணிக்கு தாவி வருகிறார்கள். இன்று காலையில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் பலர் எடப்பாடி கேம்பிற்கு ஒரே பாய்ச்சலாக ஜம்ப் அடித்துள்ளனர். ஏன் என்னாச்சு.. திடீரென இந்த அணி தாவல் ஏன் என்று அதிமுக தரப்பில் விசாரித்தோம்.. சில சுவாரசிய காரணங்கள் அதற்கு பதிலாக கிடைத்தன!
டைட்டானிக் கப்பல் மூழ்க போகிறது.. உள்ளே தண்ணீர் வந்துவிட்டது.. இந்த நேரத்தில் லைப் போட்டை எடுத்துக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை படத்தில் பார்த்து இருப்பீர்களே.. அதேபோல்தான் அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் கப்பலில் இருந்த நிர்வாகிகள் பலர் எடப்பாடி கப்பலுக்கு தாவி வருகிறார்கள்.

நிர்வாகிகள் ஆதரவு
அதிலும் ஓபிஎஸ் தரப்பிற்கு நெடுநாட்களாக நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் பலர் எடப்பாடி பக்கம் தாவி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓபிஎஸ் ஆதரவு தேனி நிர்வாகிகள் சிலர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர் . கம்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோல் கிருஷ்ண குமார், முருக்கோடை ராமர், ஆகியோர் எடப்பாடிக்கு ஆதரவு வழங்கி உள்ளனர்.

யார் ஆதரவு
மேலும் பொன் முருகன், அன்னப்பிரகாஷ், சோலைராஜ், வைகைபாண்டி உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு முக்கிய தேனி மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு வழங்கி உள்ளனர். இவர்களில் பலர் ஒரு காலத்தில் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமாக இருந்தனர். இது போக அதிமுக இளைஞரணி எடப்பாடிக்கு ஆதரவு அளித்துள்ளது. இன்று நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன் இருவரும் எடப்பாடி கப்பலுக்கு தாவினர்.

ஓபிஎஸ் டீம்
ஓபிஎஸ்சுடன் நெருக்கமாக இருந்த அவர் திடீரென எடப்பாடி டீம் சென்றுள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பு செம அப்செட்டில் இருக்கிறதாம். இன்று காலையில் இருந்து இப்படி பல நிர்வாகிகள் எடப்பாடி தரப்பிற்கு ஆதரவு அளித்துள்ளனர்... ஏன் இந்த திடீர் மாற்றம்.. ஓபிஎஸ் போகும் கப்பல் மூழ்க போகிறதா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று அதிமுக தரப்பில் விசாரித்தோம். அதற்கு அதிமுகவினரோ.. பொதுக்குழு நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வானகரத்தில் ஏற்பாடுகளை பார்த்தீர்கள்தானே.. பொதுக்குழு 99 சதவிகிதம் நடக்கும்.

டீம் மாறினர்
இவர்கள் இருவரும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள், இவர்கள் இப்போது ஓபிஎஸ் டீம். இது போக திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர். அதோடு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று எடப்பாடிக்கு நேரடி ஆதரவு தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மாஃபா பாண்டியராஜன் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வழக்கு
இதை எதிர்த்து சட்ட ரீதியாக ஓபிஎஸ் போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுக்குழுவை இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் தடை செய்யவில்லை. அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் பொதுக்குழு கூடவும் தடை வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் கே.சி.பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஆனால் இதில் உறுதியாக பொதுக்குழுவிற்கு தடை வருமா என்று தெரியவில்லை.

தடை வருமா?
பொதுக்குழு கூடுவதற்கு கோர்ட் தடை விதிக்க பெரும்பாலும் சான்ஸ் இல்லை என்றே சட்ட வல்லுனர்கள் பலர் கருதுகிறார்கள். அதனால்தான் அதிமுகவில் பலர் எடப்பாடி பக்கம் செல்கிறார்கள் என்கிறது அதிமுக சோர்ஸ். அதாவது பொதுக்குழுவிற்கு கோர்ட் தடை விதிக்காமல் போய்., ஒருவேளை பொதுக்குழு கூட்டம் மட்டும் நடந்தால்.. அது எடப்பாடிக்குதான் சாதகமாக அமையும். கண்டிப்பாக எடப்பாடி பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். இதனால்தான் இப்போதே எடப்பாடியின் "லைப்" கப்பலில் துண்டு போட நிர்வாகிகள் தாவி வருகிறார்கள் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

வேறு என்ன காரணம்?
அதுமட்டுமின்றி எடப்பாடி ஓபிஎஸ் போல மீடியாவிடம் பேசுவது இல்லை.. போஸ்டர் ஒட்டுவது இல்லை.. ஆனால் சத்தமின்றி உள்ளே காய் நகர்த்தி வருகிறார். சாமர்த்தியமாக மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரிடமும் பேசி வருகிறார். மாசெக்கள் மூலம் அடிமட்ட நிர்வாகிகளையும் தன் பக்கமே எடப்பாடி இழுத்து வருகிறார். அவர் ஸ்மார்ட் கேம் ஆடுகிறார். இதை உணர்ந்தே நிர்வாகிகள் அவர் பக்கம் செல்கிறார்கள் என்கிறார்கள் அதிமுக தரப்பினர்.

சீக்ரெட் குழு
மேலும் கடந்த முறை தர்மயுத்தத்தின் போது ஓபிஎஸ்ஸை ஆதரித்த நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற விரக்தியும் சிலருக்கு இருப்பதால் அவர்கள் இபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்களாம். அதோடு அதிமுகவில் நடுநிலையாக இருக்கும் நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கவும் எடப்பாடி சீக்ரெட் குழு வைத்து இருக்கிறாராம். அவர்கள் மூலம் நடுநிலை நிர்வாகிகளிடம் பேசி, அவர்களை தன் பக்கம் இழுக்க எடப்பாடி முயன்று வருகிறாராம். இதில் அவர் குறிப்பிடத்தகுந்த சக்ஸஸும் அடைந்துவிட்டார் என்கிறார்கள். இதை எல்லாம் பார்த்துதான் எடப்பாடி பக்கம் கொத்து கொத்தாக நிர்வாகிகள் தாவி வருகிறார்கள் என்கிறார்கள்.

கோர்ட்
ஆனால் மூழ்க போகும் டைட்டானிக் கப்பலில் வயலின் வாசிக்கும் பாடகர்கள் போல.. இன்னும் சிலர் ஓபிஎஸ் மீது நம்பிக்கையோடு அவர் டீமிலேயே இருக்கிறார்களாம். நாளை ஒருவேளை கோர்ட் விசாரணையில் பொதுக்குழுவிற்கு தடை வந்தால்.. அல்லது போலீஸ் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பொதுக்குழுவை தடை செய்தால் வேண்டுமானால் ஓபிஎஸ் கை கொஞ்சம் ஓங்கும். மற்றபடி இப்போதைக்கு எடப்பாடி கைதான் ஓங்கி இருக்கிறது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications