பக்கத்தில் வந்து உட்கார்ந்த வேலுமணி.. சட்டென ஸ்டாலின் தந்த ரியாக்சன்.. இதுதாங்க தமிழ்நாடு.. சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

காவிரி நீரை பெறுவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவிரி தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

m k stalin

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது .


காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது; தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனை பாதிக்கும் எந்தச் செயலையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பேசினார்.

கூட்டத்தில் தீர்மானம்: இந்த கூட்டத்தில், காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்குக் கண்டனம். தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திடக் கர்நாடக அரசுக்குக் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட வேண்டும்

தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்துச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் , எனத் தமிழ்நாட்டின் எண்ணங்களைத் தீர்மானங்களாக வடித்திருக்கிறோம். காவிரி டெல்டா உழவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். காவிரியில் நீர் வழங்க முடியாது என்று கூறும் கர்நாடக அரசைக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரைக் கர்நாடகா தர மறுப்பது தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சுவாரசிய சம்பவம்: நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

சுவாரசிய சம்பவம்: அதன்படி முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்திற்கு வர.. அதிமுக சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வியப்பளிக்கும் விதமாக அதிமுக சார்பாக இந்த கூட்டத்தில் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டார்.

வேலுமணி முதல் வரிசையில் ஸ்டாலினுக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தார். கட்சியின் சட்டசபை பலத்தை வைத்து இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. வேலுமணியை பார்த்ததும்.. ஸ்டாலின் அப்படியே சிரித்து கையை கூப்பி நட்பாக வணக்கம் வைத்தார்.

பதிலுக்கு வேலுமணியும் வணக்கம் வைத்தார். இருவரும் செயலும் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசியல் நீண்ட காலத்தில் பின் இப்படி அனைத்து கட்சி கூட்டம் ஒன்றில் உண்மையாக அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன. முக்கியமாக பிரதான எதிர்க்கட்சி கூட கலந்து கொண்டு உள்ளது.

அதில் இரண்டு எதிர் எதிர் தலைவர்கள் நட்பாக கையை கூப்பி வணக்கம் வைத்த நிகழ்வு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+