இப்போ விட்டு வைக்கிறேன்! ஸ்டாலின் முடிவு! நியூஸ் கேட்டு.. சந்தோசப்பட்ட "அந்த" அமைச்சர்கள்!என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை ஒன்று சீனியர் அமைச்சர்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்று சிறியதும், பெரியதுமாக இதுவரை 4 முறை அமைச்சரவை மாற்றங்களை செய்து இருக்கிறார். அதில் கடைசியாக செய்த இரண்டு அமைச்சரவை மாற்றங்களும் மிகப்பெரியது ஆகும்.
கடந்த வருடம் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். டிசம்பர் மாதம் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.

ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன.
கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவதாக இந்த ஆண்டும் அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார்.
மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

மாற்றவில்லை: அதே சமயம் கடந்த ஆண்டு டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய டாப் அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களின் துறைகள் மாற்றப்படவில்லை.
இந்த ஆண்டும் இவர்கள் யாரும் மாற்றப்படவில்லை. இதில் மா. சுப்பிரமணியன், துரைமுருகன், ரகுபதி, உள்ளிட்ட சிலரின் அமைச்சரவை இலாக்கா மாற்றம் செய்யப்படும் என்று செய்திகள் வந்தன.
அதேபோல் பெண் அமைச்சர் ஒருவர் நீக்கப்படுவார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்திகளை பொய்யாக்கி முதல்வர் ஸ்டாலின் இலாக்கா மாற்றங்களை மட்டுமே சிறிய அளவில் செய்துள்ளார்.
முக்கியமாக சீனியர் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
முன்னதாக ஸ்டாலின் இதில் சிலரை மாற்ற போகிறார் என்று கூறப்பட்டது. உதாரணமாக துரைமுருகனிடம் உள்ள நீர்வளத்துறை, கனிமவளம் பறிக்கப்பட்டு அவரிடம் சட்டத்துறை அளிக்கப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஸ்டாலின் இது போன்ற நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
சீனியர்கள் மீது இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம்.. அவர்களால் பிரச்சனை இல்லை.. அதனால் அவர்களை விட்டு வைக்கலாம் என்று ஸ்டாலின் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஸ்டாலினின் இந்த முடிவால் தலை தப்பியது என்று சீனியர் அமைச்சர்களும் சந்தோஷமாக இருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications