இனி தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் ஹைதராபாத்திற்கு ஆம்னி பேருந்தில் போக முடியாது? அரசின் ரூல் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்வது இனி கடினம் ஆகும் சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன. கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்ததற்கு எதிராக 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைப்பற்றி சிறைபிடித்துள்ளனர்.

இப்படி அதிகாரிகள் மூலம் சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் சமாதானம் செய்து கொண்டனர்.
தீபாவளிக்காக தற்போது ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு வெளியாகி உள்ளதால் மக்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊர் திரும்புவதில் சிக்கல்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்வது இனி கடினம் ஆகும் சூழ்நிலைகள் ஏற்பட்டு உள்ளன. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு இரண்டு விதமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒரு வகையான பேருந்துகள்.. தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள். இரண்டாவது ஆம்னி பேருந்துகள் தென் மாநில ஆம்னி பேருந்து வகை. இதில் தமிழ்நாட்டு ஆம்னி பேருந்துகள் இயங்க தடை இல்லை. ஆனால் தென் மாநில ஆம்னி பேருந்து தமிழ்நாட்டில் ரிஜிஸ்டர் செய்யவில்லை என்றால் இயங்குவது கடினம்.
அதாவது பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அங்கே ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நிறுவனம் இங்கே சேவையை செய்ய முடியாது. அதேபோல் "என்எல்" என்ற ரிஜிஸ்டர் மூலம் இயங்கும் தென் மாநில ஆம்னி பேருந்துகளையும் இங்கே அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு ரூல்ஸ்: தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆம்னி பேருந்துகள் டிராவலஸ் நடத்த முடியாது. இப்போது ஆம்னி பேருந்துகள் இயங்குவதே அதில் இருக்கும் விதி ஓட்டை ஒன்றை வைத்துதான். அதன்படி பேருந்தில் பயணிக்கும் மக்கள் எல்லோரும் டூர் சொல்வதாகவே ஆம்னி பேருந்துகள் அனுமதி வாங்கி பயணம் மேற்கொள்கின்றன.
மற்றபடி பேருந்துகள் தானாக டிராவல்ஸ் நடத்த அனுமதி கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆம்னி தமிழ்நாடு செக்: இதன் மூலம் ஆம்னி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு செக் வைத்துள்ளது. ஆம்னி பேருந்துகள் தங்களை contract carriage என்று கூறி நாடு முழுக்க ஓட்டலாம் என பஸ் அதிபர்கள் சொன்னால் route service ஓட்டுவது குற்றம் ஆகும். அதுவே நாங்கள் ரூட் சர்வீஸ் ஓட்டுவோம் contract carriage இல்லை என்று கூறினால் மாநில ரிஜிஸ்டிரேஷன் & பர்மிட் வாங்க வேண்டும். அதன்பின் மட்டுமே பொது ரிசர்வேஷன் செய்ய முடியும். இதனால் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications