இம்சை தாங்கல.. பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்த ஸ்டாலின்.. ஆளுநர் ரவிக்கு சிக்கல்? என்ன நடக்குது?
சென்னை: எதிர்கட்சிகளை திட்டமிட்டு மோடி அரசு கழுத்தை நெரிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பாக வழக்கு போட்டுள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக வழக்கு தொடுத்துள்ளது. ஆளுநருக்கு உடனே உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
மனுவில் என்ன இருக்கிறது?: தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார், என்று மனுவில் கூறியுள்ளது.
பேட்டி: இது தொடர்பாக பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எதிர்கட்சிகளை திட்டமிட்டு மோடி அரசு கழுத்தை நெரிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் வழக்கு போட்டுள்ளனர் . இந்த போக்கு தொடர்வது இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குழி தோண்டி புதைக்கும் செயலை மத்திய அரசு செய்கிறது. இதை விடக்கூடாது என்று இவர்கள் ஜெயிலுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே பஞ்சாப்பில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தனர். இப்போது மீண்டும் வழக்கு தொடுத்துள்ளார். இப்போது தமிழ்நாட்டிலும் வழக்கு தொடுத்துள்ளனர்.
தெலுங்கானாவில் மே மாதம் வழக்கு தொடுத்தனர். இத்தனை காலம் தமிழ்நாடு ஆளுநரின் இம்சைகளை ஸ்டாலின் பொறுத்துக்கொண்டார். வேறு வழியில்லாமல் இப்போது ஸ்டாலின் சென்றுள்ளார். பொறுத்தது போதும் பொங்கி எழு என்று முடிவு செய்து ஸ்டாலின் அரசு கடைசி வாய்ப்பாக இங்கே சென்றுள்ளார். கடந்த ஓராண்டாக அவர் இம்சை செய்து கொண்டு இருந்தார். அங்கே சகிக்க முடியாமல் நிலைமை சென்றதால் ஸ்டாலின் இப்போது வழக்கு தொடுத்துள்ளார்.

ஸ்டாலின் பொறுமை: இந்த வழக்கு இப்போது முடியாது. அது கண்டிப்பாக நீண்ட காலம் நடக்கும். நீண்ட காலம் செல்லும். ஏனென்றால் வழக்கில் முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே பேரறிவாளன் வழக்கில் இதே போன்று உச்ச நீதிமன்றம் கூறியது. திரும்ப திரும்ப மாநில அரசு சொல்லி நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, அதை குடியரசுத் தலைவரிடம் கொடுத்தீர்கள்.. ஆளுநர் அவரின் அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்று ஆளுநருக்கு குட்டு வைத்தது.
அதன்பின் 6 பேரின் விடுதலையின் போதும் இதே விஷயத்தை சொல்லித்தான் விடுதலை செய்தனர். ஆளுநருக்கு எல்லாம் சுரணை இருந்தால் இவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இவர்கள் மத்திய அரசின் கங்கணானிகள். அதனால் போக மாட்டார்கள். தமிழ்நாட்டின் மனுவில், மற்ற மாநில அரசின் மனுக்களை விட கடுமையான புகார்களை, கடுமையான விஷயங்களை குறிப்பிட்டு உள்ளனர். கால நிர்ணயம் இல்லை என்பதை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். கால நிர்ணயம் என்பதை குறிப்பிட்ட காலம் என்று எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அதைதான் சொல்லி இருக்கிறது. அதனால் இந்த வழக்கு கண்டிப்பாக நீண்ட காலம் நடக்கும். இது ஆளுநருக்கு கண்டிப்பாக கடிவாளம் போடும். உடனே தீர்ப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வழக்கு கண்டிப்பாக நீண்ட காலம் நடக்கும், என்று பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications