மற்றவர்களுக்கு முன்பாக.. அதிகாலையிலேயே விழா நடக்கும் இடத்திற்கு.. அவசரமாக சென்ற விஜய்.. என்ன காரணம்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு இன்று அதிகாலையிலேயே சென்றடைந்தார் விஜய். அவர் அதிகாலையிலேயே சென்றதற்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகளை இன்று வழங்குகிறார் நடிகர் விஜய். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வழங்குகிறார்.

கடந்த வருடமும் இதேபோல் விஜய் விருதுகளை வழங்கினார். கடந்த வருடம் நடிகர் விஜய்யின் நிகழ்ச்சி 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஒருவழியாக இரவில் முடிந்தது. எந்த அளவிற்கு ஆரவாரத்துடன் தொடங்கியதோ அதே அளவிற்கு ஆரவாரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.
இந்த முறையும் அதேபோல் விஜய் பரிசுகளை வழங்க உள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மூலம் இவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இன்று காலை நடிகர் விஜய் பத்து நிமிடங்கள் பேசுவார். அதன்பின் மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 21 மாவட்ட மாணவ மாணவியருக்கு விஜய் விருதுகளை வழங்குகிறார்.
அதிகாலையிலேயே வந்த விஜய்; தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு இன்று அதிகாலையிலேயே சென்றடைந்தார் விஜய். 6.30 மணிக்கே விஜய் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வந்தார். அவர் அதிகாலையிலேயே சென்றதற்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் அரங்கிற்கு முன்பாகவே சென்றுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எக்ஸாம் ரிசல்ட்: தமிழகத்தை பொறுத்தவரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடந்தது. அதன்பிறகு விடுமுறை வழங்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 9.10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4.57 லட்சம் பேர் மாணவர்கள். 4.52 லட்சம் பேர் பெண்கள். ஒரு 3ம் பாலினத்தவர் ஆவார்கள். இதையடுத்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ரிசல்ட் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
இன்னொரு பக்கம் தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பொதுத் தேர்வு தொடங்கியது. 22ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 83 விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த மாதம் இவர்களுக்கு ரிசல்ட் வெளியானது.
ரிசல்ட் என்ன: இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 94.56 சதவீத மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவிமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்னொரு பக்கம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications