கிளம்பும் முன்.. அமைச்சர்கள், டாப் அதிகாரிகளை அழைத்த முதல்வர்.. திடீரென மீட்டிங்.. பேசியது என்ன?
சென்னை: அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
இதற்காக நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விழுப்புரம் சென்றார். நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அவர் விழுப்புரம் சென்றடைந்தார்.

கூட்டம்
நேற்று மாலை இந்த பயணத்திற்கு செல்லும் முன் முதல்வர் ஸ்டாலின் மூலம் அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முன்னதாகவே அமைச்சர்கள் எல்லோரும் சென்னையில் இருக்கும்படி கூறப்பட்டது. அதன்படியே நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் செல்லும் முன் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள்
அதோடு தலைமை செயலாளர் இறையன்பு, பல்வேறு துறை சேர்ந்த செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் ஸ்டாலின் நாளை நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட விவாதங்கள் குறித்து ஆலோசனை செய்தார். கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்பின் அவையில் பொது விவாதம் நடைபெற்றது.

மானிய கோரிக்கை
இந்த நிலையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை நடக்க உள்ளது. நாளை முதல் வரும் மே 10ம் தேதி வரை இந்த விவாதங்கள் நடக்க உள்ளன. நீர்வளத்துறை, காவல்துறை, பொதுத்துறை என்று பல்வேறு துறைகளில் இந்த விவாதம் நடக்க உள்ளது. மே 10ம் தேதி வரை கூட்டம் நடக்க உள்ளதால் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி இந்த கூட்டத்தொடரில் விவாதங்கள் நடத்தப்பட உள்ளன.

ஆலோசனை
இந்த நிலையில்தான் பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தில் என்ன செய்யலாம், எப்படி செயல்படலாம், ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டார். துறை ரீதியாக செயலாளர்களிடம் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விளக்கங்களை கேட்டார். எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்களை எழுப்பும் வாய்ப்புகள் உள்ளன.

சொத்து வரி
முக்கியமாக இன்று தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பாக இன்று தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதை பற்றி சட்டசபையிலும் அதிமுக கேள்விகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரம் குறித்தும் அதிமுக கேள்விகளை எழுப்பும் என்று கூறப்படுகிறது.

என்ன பேசினார்?
ராஜேந்திரன் முதுகுளத்தூர் ஒன்றிய நிர்வாகியான ராஜேந்திரன் "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக எழுந்த புகாரை அடுத்து ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்ததாக கூறப்படுகிறது. அதோடு துறை ரீதியாக அமைச்சர்களின் செயல்பாடுகள், முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட ரிப்போர்ட்களை அவர் கூட்டத்தில் ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications