ஆஹா.. என்ன இது? கருணாநிதி நினைவிடத்தில் ‘திடீரென’ முளைத்த கோயில் கோபுர அலங்காரம்.. இதுதான் காரணமாம்!
சென்னை : சென்னை மெரினா கடற்கரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நாள்தோறும் விதவிதமான மலர் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று கோவில் கோபுரத்துடன் மலர் அலங்கார வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனால், அத்துறையின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், கோவில் கோபுர வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இன்று சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறை, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்தத் துறைகளின் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடுகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுர வடிவில் சிறப்பு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் கோபுரத்தின் மேலே தமிழ்நாடு அரசு சின்னத்துடன் இந்து சமய அறநிலையத்துறை என்ற வாசகமமும் இடம்பெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் துறை ரீதியான புதிய அறிவிப்புகளை வெளியிடும் நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுர வடிவில் திடீரென இன்று அலங்காரம் செய்யப்பட்டிருந்ததை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். இதுதொடர்பாக புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications