Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டேஞ்சர்".. பாஜகவை விரட்டி அடிங்க.. எப்ப பார்த்தாலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர்".. எகிறிய திருமாவளவன்

பாஜகவை சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளார் திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக முக்கியமான ஒரு கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் இன்று ஆழமாக தெரியப்படுத்தி உள்ளார்.. பாஜகவுக்கு எதிரான அணிகள் ஒன்று சேரும் விஷயம் குறித்து திருமா பேசிய பேசுசு அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றன.

வரப்போகும் எம்பி தேர்தலுக்கு தேசிய அரசியல் கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. இந்திய அரசியலின் தலையெழுத்தை மாற்றியமைப்பதற்கான ஒவ்வொரு முன்னெடுப்புகளும் மிக கவனமாக கையாளப்பட்டு வருகின்றன.

2019-ல் எம்பி தேர்தலிலும் இப்படியான ஒரு முயற்சியை சந்திரபாபுநாயுடு கையில் எடுத்தார்.. இதற்காகவே, தேசிய தலைவர்கள் ஒவ்வொருவராக சந்தித்து பேசி ஆதரவு கேட்டும் வந்தார்.. பெரும்பான்மையான தலைவர்களும் அவருக்கு ஆதரவை தந்தனர்.. ஆனால் பிரதமர் வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அந்த கூட்டணி திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

இந்தமுறை, அந்த முயற்சியை மம்தா பானர்ஜி கையிலெடுத்துள்ளார்.. அவரும் ஒவ்வொரு தலைவராக சந்தித்து பேசி வருகிறார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் போன்ற பிரதான தலைகள் இந்த கூட்டணியில் கிட்டத்தட்ட இடம்பெற்றாகிவிட்டதுபோல் தெரிகிறது. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முடிவு மட்டும் எப்போது எப்படி மாறுமோ உறுதியாக தெரியாது.

 திமுக, ராகுல்

திமுக, ராகுல்

ஆனால், காங்கிரஸ் மம்தாவுடன் இணைய விரும்பவில்லை.. தன்னை பிரதம வேட்பாளராக அறிவிக்க மம்தா முயல்வது போல, ராகுலை பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் தரப்பும் முயல்கிறது.. இதனால் கடந்த ஒரு வருடமாகவே இவர்களுக்குள் இணக்கமான போக்கு ஏற்படவில்லை.. எனினும், தற்போது 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியானது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் யோசிக்க வைத்து வருகிறது.. மம்தா இதற்காக ஒருபடி கீழேயிறங்கி வந்து, காங்கிரஸுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார்.

 ஈகோ பிரச்சனை

ஈகோ பிரச்சனை

இவர்கள் பிரதமர் ஈகோ பிரச்சனையால், வலுவான எதிர்க்கட்சி உருவாகாமல் போய்விடுமோ என்ற கலக்கமும் பல எதிர்க்கட்சி தலைவர்களை சூழ்ந்து கொண்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான் விசிக தலைவர் திருமாவளவனின் பேட்டி முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் திருமாவளவன் சொன்னதாவது:

 மதவெறுப்பு அரசியல்

மதவெறுப்பு அரசியல்

"காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வழக்கம்போல் ஒன்றுசேராமல் தனித்தனியே போட்டியிட்டதன் விளைவாகவும், மத வெறுப்பு அரசியலை தொடர்ந்து பரப்பி வருவதாலும் பாஜக உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது... உத்தரப்பிரதேம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அவர்கள் பேசவில்லை. மாறாக ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கம் எழுப்புவது, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பது என்று மக்களின் மத உணர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

 பாஜக அரசியல்

பாஜக அரசியல்

இது மிகவும் ஆபத்தான அரசியல். இந்தியாவை சூழ்ந்திருக்கும் இந்த ஆபத்தை எதிர்கொள்ளவும், விரட்டி அடிக்கவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் திரள முன்வர வேண்டும். எந்த கட்சி தலைமையேற்பது, யார் பிரதமர் என்பதைவிட எல்லாருமே முதலில் ஒருங்கிணைய வேண்டும் என்ற அவசியம் இருப்பதை எதிர்கட்சிகள் உணர வேண்டும்... நடந்து முடிந்த 4 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு அதைத்தான் உணர்த்திவிட்டு போயுள்ளன.. எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது... அதை நாம் தடுத்தாக வேண்டும்" என்றார்.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

இதே விஷயத்தை, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. மிக அழகாக குறிப்பிட்டார்.. "303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் பாஜக.. அவங்களை யார் அடக்குவது? 303 பேர் இருக்காங்க.. அவர்களை வெற்றி பெற செய்தது யார்? இத்தனைக்கும் அவர்கள் பெற்ற வாக்குசதவீதம் வெறும் 37% மட்டுமே... இவர்கள் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.. இன்று இந்த மேடையில் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.. இந்த நிலை மேலும் மேலும் தொடர வேண்டும்..

 திராவிட மாடல்

திராவிட மாடல்

1996ம் ஆண்டு போல, 2004-ம் ஆண்டு போல மேலும் சில நண்பர்களையும் இணைத்து கொண்டு, ஒற்றுமையாக போரிட்டால்தான் மதவாதத்தை ஒடுக்க முடியும்.. திராவிட மாடல் அரசியல், மாநில சுயாட்சி, மதச்சார்பின்மையும் மலரும்.. நேரில் பார்க்கும்போது ஒருவரையொருவர் கட்டி தழுவி கொள்கிறோம்.. வேற்றுமைகளை மறந்து ஒன்றுகூடுகிறோம்.. ஆனால், தேர்தல் என்று வந்தால் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல் தனித்தனித்தனியாக பிரிந்து போய்விடுகிறோம்..

சுயாட்சி

சுயாட்சி

இப்படி பிரிந்து போவதால்தான், நாட்டில் பெரிதாக மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை.. இனிமேலாவது நாம் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து எப்படியாவது மதவெறி ஆட்டம் இந்த தடவையோடு முடித்து வைக்கப்பட வேண்டும்.. தென்னகத்தில் தமிழகத்தில் தலைவர்கள் இன்று கூடியது போல கூட வேண்டும்.. மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை என்பதுதான் திராவிட மாடல் அரசியல்.. யார் தலைமையில் வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.

Recommended Video

    மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்- Arjun Sampath | Oneindia Tamil
     டிஆர் பாலு

    டிஆர் பாலு

    ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் தனித்தனியாக நிற்பதால் வாக்குகள் சிதறிபோய்விடுகிறது.. இதனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. இனியாவது மதத்தை வைத்து ஆட்டம் போடும் பாஜகவுக்கு முடிவு கட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும்" என்று டிஆர் பாலு மேடையில் இருந்த தலைவர்களிடம் உருக்கமாக கேட்டுக் கொண்டார்... இதே கருத்தை திருமாவளவனும் இன்று வெளிப்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள்தான் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டி உள்ளது.. பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+