கழிவறைக்கு போறவங்களுக்கு 5 ரூபாய் வாங்குனா தப்பா சார்? விடாமல் விரட்டும் அறப்போர் இயக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு பேருந்துகளை உணவகங்களில் நிறுத்தும் போது கழிவறைக்கு போறவங்களுக்கு 5 ரூபாய் வாங்குனா தப்பா சார்? என்று கேள்வியும் கேட்டு அதற்கு பதிலும் கொடுத்துள்ளது அறப்போர் இயக்கம்.

அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "கழிவறைக்கு கட்டணம் வாங்கி அப்படி என்ன சம்பாதிக்க போறாங்க என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு எளிய கணக்கு.

Why did TN govt plan to collect toilet fees 5 rupees at food stops of government buses?

குறைந்தபட்ச சராசரி கணக்கு போட்டாலே வருடத்திற்கு 63 கோடி ரூபாய் பணம் கழிவறை கட்டணம் என்ற பெயரில் அரசு பேருந்து பயணிகளிடம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இன்னும் பண்டிகை காலங்களில் அதிக பேருந்துகள் அதிக கூட்டத்துடன் செல்லும் போது கழிவறை கட்டணத்தை உயர்த்தி மேலும் பல கோடிகள் கொள்ளை அடிப்பார்கள்.

சரி இப்படி கொள்ளை அடித்த பிறகு சுகாதாரமான கழிவறை வசதி கிடைக்குமா? தற்போது வரை சட்ட விரோதமாக 10 ரூபாய் வரை கழிவறை கட்டணம் வாங்கியும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து தர முடியாத உணவகங்கள் 5 ரூபாய் வாங்கினால் மட்டும் எப்படி சுகாதாரமான கழிவறை வசதி ஏற்படுத்தி தருவார்கள் என்று SETC MD Elangovan விளக்கம் அளிப்பாரா..?

Tender விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வைக்க முடியாமல் தோல்வி அடைந்த திமுக அரசாங்கம் மக்களிடம் காசு வாங்க அனுமதித்து உணவக கொள்ளையுடன் தற்போது கழிவறை கொள்ளை அடிக்க சட்ட அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். மக்கள் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் உணவின் தரத்தையும், கழிவறை சுகாதாரத்தையும் அரசாங்கம் உறுதி செய்யாது. " என்று கூறியுள்ளது.

Why did TN govt plan to collect toilet fees 5 rupees at food stops of government buses?

முன்னதாக அறப்போர் இயக்கம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், நெடுஞ்சாலை உணவக உரிமையாளர்கள் மற்றும் ப்ரோக்கர்கள் கோரிக்கையை ஏற்று கழிவறைக்கு கட்டணம் வசூல் செய்ய விதிகளை திருந்திய அமைச்சர் சிவசங்கர் மற்றும் MD இளங்கோவன் ஆகியோர் அதற்கு ஒரு வேடிக்கையான காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்.

யாருமே இந்த உணவகங்களில் சாப்பிடுவதில்லையாம். ஆகையால் கழிவறை காசு வாங்கியாவது உணவக உரிமையாளர்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என்று 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளார்களாம்.
சரி அப்போ அமைச்சரும், MDயும் அந்த உணவகங்களில் தைரியமாக சாப்பிடுவார்களா? நோய் பரப்பும் சுகாதாரமற்ற அந்த உணவக கழிவறையை அவர்கள் வீட்டு பெண்மணிகள் பயன்படுத்த அனுமதிப்பார்களா? மாட்டார்கள்.

Why did TN govt plan to collect toilet fees 5 rupees at food stops of government buses?

ஆனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பாமர மக்களுக்கு வேறு வழி இல்லையே. இந்த உணவகங்களில் தினம் தினம் அவர்கள் அனுபவிக்கும் துயரம் உங்களுக்கு சிறிதளவாவது புரிந்திருந்தால் இப்படி ஒரு வேலையை செய்திருக்க மாட்டீர்கள்.

பாமர மக்கள் பயணம் செய்யும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில் அத்தியாவசிய தேவையான கழிவறை வசதி இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அரசாங்கத்துக்கு Email மூலம் தெரிவிக்க அழைக்கிறோம்.
உங்கள் கணினி அல்லது மடிக்கணினி மூலம் இந்த இணைப்பை https://bit.ly/WeNeedFreeToilet_SETC கிளிக் செய்து Send பட்டன் அழுத்தினால் உங்கள் கோரிக்கையை அரசு போக்குவரத்து துறைக்கு தெரிவிக்கலாம். " என்று கூறியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+