மண்ணுக்கடியில் புதையலே கிடைச்சாலும்.. தும்பை விட்டு வாலை பிடிக்காதீங்க: வார்னிங் தந்த டிடிவி தினகரன்
சென்னை: மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்கம் தொடர்பான மத்திய அரசின் டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம் விவசாயம்தான் வேண்டும் என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

காவிரி படுகை
இதைத்தவிர, நெய்வேலிக்கு பக்கத்தில் இன்னொரு சுரங்கத்தை அமைக்க முடிவாகி உள்ளது.. அதாவது, வருடத்துக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ.3556 கோடி செலவில் அமைக்க என்எல்சி இந்தியா நிர்வாக குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இதற்காக 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்எல்சி கையகப்படுத்த போவதாக தெரிகிறது.. இந்த 3வது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பாலான பகுதி, காவிரி படுகையை ஒட்டியே அமைய போவதாகவும் சொல்கிறார்கள்..

சேத்தியாத்தோப்பு
இதைத்தவிர, 4வதாக, வீராணம் நிலக்கரித் திட்டம், 6வதாக, பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், 7வதாக, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், 8வதாக, தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், 9வதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.. இவைகளில், ஏற்கனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக, கிட்டத்தட்ட 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படக்கூடும்.. அதிலும், இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி ஆகிய 4 திட்டங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன.

கொந்தளிப்பு
அதனால்தான், விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர்.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க கூடாது என்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.. ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது என்றும் விவசாயிகள் அச்சமும், வேதனையும், கவலையும் தெரிவித்து வருகிறார்கள்..

அமமுக
இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு அமமுக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், விவசாயிகளின் கருத்துக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, "மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது.

மண்ணுக்கடியில் வைரம்
ஏற்கனவே NLC நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் காவிரி டெல்டா பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்களை கபளிகரம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டங்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். 'மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும்' என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு.

தும்பி - வால்
ஆகவே, மாநில அரசு இது வெறும் ஆய்வுப்பணிதான், சுரங்கம் அமைக்கப்படபோவதில்லை என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைப் போல மக்களை ஏமாற்றாமல், இந்த ஆய்வுப்பணிக்காக விடப்பட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும். தும்பை விட்டு வாலை பிடிப்பதைவிட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும்" என்று டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளித்த டிடிவி தினகரன் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications