திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் திருமாவளவன் களமிறங்கி உள்ளார். இவர் தற்போது எம்பியாக உள்ள நிலையில் திடீரென்று சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து நிலையில் அதன் பின்னணியில் 3 முக்கிய மேட்டர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதையடுத்து இந்த தேர்தலில் 10 தொகுதிகள் வரை விசிக எதிர்பார்த்தது. ஆனால் இரட்டை இலக்கத்தில் தொகுதி கிடைக்கவில்லை.

மாறாக கடந்த சட்டசபை தேர்தலை விட விசிகவிற்கு 8 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. இதில் 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகளும் அடங்கும். அதன்படி இன்று சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்தார்.
திண்டிவனம் (தனி)தொகுதியில் வன்னியரசு, கள்ளக்குறிச்சி ((தனி)) தொகுதியில் மாலதி, செய்யூர் ((தனி))தொகுதியில் சிந்தனை செல்வன், பெரியகுளம் ((தனி)) தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் ((தனி)) தொகுதியில் எழில் கரோலின், பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரஹ்மான், திருப்போரூர் பன்னீர் தாஸ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.
திருமாவளவன் போட்டி
மீதமுள்ள காட்டும்ன்னார் கோவில் (தனி) தொகுதியில் திருமாவளவனே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் தற்போது சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். இதன்மூலம் அவர் தேசிய அரசியலில் இருந்து தமிழக அரசியலுக்கு திரும்பி உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக திருமாவளவன் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. இப்படியான சூழலில் அவரது இந்த அறிவிப்பு அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் என்ட்ரி கொடுத்து இருப்பதன் பின்னணியில் 3 முக்கிய விஷயங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் விஷயம்
அதன்படி முதல் விஷயம் என்னவென்றால் திருமாவளவன் எம்பியாக இருப்பதால் தமிழக அரசியலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளை பேசி அதற்கு தீர்வு காண்பதில் சில பிரச்சனைகள் இருப்பதாக திருமாவளவன் நினைத்து இருக்கலாம். இதனால் எம்எல்ஏ ஆகிவிட்டால் சட்டசபையில் உரக்க தனது கருத்தை முன்வைக்கலாம். இதன்மூலம் நேரடியாக அரசின் கவனத்துக்கு பிரச்சனைகளை கொண்டு சென்று தீர்வு காண முடியும் என்று திருமாவளவன் நினைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2வது விஷயம் ஸ்டாலின்
2வது விஷயம் என்னவென்றால் ஸ்டாலினிடம் திருமாவளவன் 10 சீட்டுகள் வரை கேட்டார். ஆனால் ஸ்டாலின் 8 தொகுதிகளை மட்டுமே வழங்கினார். அதேவேளையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்த தேமுதிகவிற்கு 10 சட்டசபை தொகுதி + ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்கினார். இதனை திருமாவளவனால் ஏற்க முடியவில்லை. இதனால் அவர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது கட்சியை மாநிலம் முழுவதும் பலப்படுத்தி தனது சக்தியை நிரூபிக்க திருமாவளவன் முயலும் வகையில் இந்த முயற்சியை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
3வது விஷயம் விஜய்
3வது விஷயம் என்னவென்றால் தற்போது விஜய் அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். விஜய்க்கு வடமாநிலங்களில் செல்வாக்கு அதிகம் உள்ளது. குறிப்பாக பட்டியலின மக்கள் விஜயை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் விஜய் பக்கம் வடமாநிலங்களில் பட்டியலினத்தவர்களாக உள்ள பறையர் மக்களின் வாக்குகளை தடுக்க வேண்டிய கட்டாயம் திருமாவளவனுக்கு உள்ளது. இதனால் அவரே நேரடியாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் தனது வாக்கு வங்கியான பட்டியலினத்தவர்களின் ஓட்டுகளை விசிக மற்றும் திமுக கூட்டணியில் தக்க வைக்க முடியும் என திருமாவளவன் நம்பி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில் தொகுதி பின்னணி
இந்நிலையில் தான் அவர் திடீரென்று சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த காட்டுமன்னார் கோவில் எம்எல்ஏவாக விசிகவின் சிந்தனை செல்வன் உள்ளார். தற்போது அவருக்கு பதில் திருமாவளவன் களமிறங்கி உள்ளார். இதற்கு முன்பு விசிக சார்பில் 2006ல் ரவிக்குமார் இந்த தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். அதன்பிறகு இந்த தொகுதியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டார். அதில் திருமாவளவன் 87 ஓட்டகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அதிமுகவின் நா. முருகுமாறன் 48,450 ஓட்டுகள் பெற்றார். தொல் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தற்போது மீண்டும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவிலில் களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு.. எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டி? வெளியான லிஸ்ட் -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
மதிமுக + கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.. 6 தொகுதிகளுக்கு வெளியான லிஸ்ட் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி










Click it and Unblock the Notifications