Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உச்சக்கட்ட கசமுசா".. சொதப்பல் பிளானால் கடுப்பான மனைவி.. 3 பிள்ளைகளை மறந்து போட்ட ஆட்டம்.. கொடூரம்

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொன்ற இளம் மனைவி கைதானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதலனை கைவிட முடியாமல், கணவனை கொல்ல, மனைவி மேற்கொண்ட ஒவ்வொரு கொலை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தது.. இறுதியில் நடந்த அந்த பயங்கரம் டெல்லியையே உலுக்கிவிட்டது.

எவ்வளவுதான், பண்பாடு, கலாச்சாரம் என்று பேசி கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் கள்ளக்காதல்கள் பெருகி கொண்டிருக்கின்றன..

இந்த கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தங்கள் கள்ளக்காதலர் உதவியுடன், கூலிக்கு ஆள் வைத்து கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு வக்கிரங்கள் பெருகி வருகின்றன.

 பச்சிளங்குழந்தை

பச்சிளங்குழந்தை

அதைவிட கொடுமை, கள்ளக்காதலுக்கு இடையூறு என்று நினைத்து, தான் பெற்ற பச்சிளங்குழந்தையை அடித்து கொல்லும் அளவிற்கு, மிக மோசமான சீரழிவை இந்த கள்ளக்காதல் உறவுகள் ஏற்படுத்தியும் வருகின்றன. இதற்கெல்லாம் நம் சமூக அமைப்பு, சமூக ஊடகங்கள், தரமற்ற கல்வி முறை போன்றவை முக்கிய காரணங்கள் என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடிவதில்லை.. கள்ளக்காதல் கொடூரங்களுக்கு வடமாநிலம், தென்மாநிலம் என்ற பாகுபாடும் இல்லாமல், அநியாயமும், அட்டகாசமும் பெருகி கொண்டிருக்கின்றன.

 சந்தோஷம்

சந்தோஷம்

அந்த வகையில், டெல்லியில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. எல் தர்யாகஞ்சி என்ற பகுதி உள்ளது.. இந்த பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் குரேஷி.. இவர் மனைவி பெயர் ஜிபா.. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்... குரேஷி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்... ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கை, திடீரென தடம் புரண்டது.. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்தது..

உச்சக்கட்டம்

உச்சக்கட்டம்

அதிலும், கடந்த சில மாதங்களாகவே, இவர்களுக்குள் தகராறு உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டது.. இதற்கெல்லாம் காரணம், சாட்சாட் ஜிபாவின் கள்ளக்காதல்தான்.. அந்த இளைஞர் பெயர் சோயப்.. ஃபேஸ்புக்கில் இவர்கள் 2 பேரும் பழக்கமாகி உள்ளனர்.. அப்படியே போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர்.. உடனே நேரிலும் சந்தித்து கொண்டனர்.. அப்போதே கள்ளக்காதல் ஸ்டார்ட் ஆகிவிட்டது... சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் இருவரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர்.

 மொய்தீன்கான்

மொய்தீன்கான்

இந்த விஷயம் எதுவுமே கணவனுக்கு தெரியாது.. ஒருவேளை தெரிந்துவிட்டால், ஏதாவது பெரிய பிரச்சினையாகி விடுமோ என்று ஜிபா பயந்தார்.. இப்படி பயந்து பயந்து இருப்பதை விட, ஒரேடியாக போட்டு தள்ளிவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்றும் நம்பினார்.. இதற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டார்.. ஒவ்வொரு கொலை முயற்சியிலும், மொய்தீன்கான் அவருக்கே தெரியாமல் எஸ்கேப் ஆகி வந்தார்.

கூலிப்படை

கூலிப்படை

இதனால் கள்ளக்காதல் ஜோடி, வெறுத்து போய்விட்டனர்.. எப்படி ஐடியா போட்டாலும், கணவன் உயிர் பிழைத்து விடுகிறாரே என்று நினைத்து, கூலிப்படை வைத்து கொலை செய்யலாம் என்று முடிவு செய்தனர்.. இதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த கோஸ்வாமி என்ற கூலிப்படை கொலையாளியை சந்தித்தனர்.. மொய்தீன்கானை எப்படியாவது கொலை செய்துவிடுமாறு சொன்னார்கள்.. கொலை செய்ய 6 லட்சம் ரூபாய் வரை தொகை பேசப்பட்டது.. இப்போது கொலை செய்ய தயாரானது அந்த கூலிப்படை.. முதல்வேளையாக, இதற்காகவே உ.பியில் ஒரு பைக் திருடப்பட்டது..

 பாத்ரூம் சென்ற கணவர்

பாத்ரூம் சென்ற கணவர்

சம்பவத்தன்று இரவு, மொய்தீன்கான் வீட்டு வாசலில் அந்த கும்பல் மறைந்துகொண்டது.. அப்போது சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்தார் மொய்தீன்கான்.. அவர் வெளியே வரும்போதே, கூலிப்படைக்கு போன் செய்து அலர்ட் செய்தார் மனைவி ஜிபா.. ஏற்கனவே தயாராக இருந்த கூலிப்படை கும்பல், மொய்தீன்கானை வீட்டு வாசலிலேயே போட்டு தாக்கியது.. சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது.. விடியற்காலையில் மைதீன்கான் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அந்த தெரு மக்கள், போலீசாருக்கு போன் செய்தார்கள்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

போலீசாரும் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... விசாரணையும் ஆரம்பமானது.. முதல் விசாரணையே ஜிபாதான்.. கள்ளக்காதலும் வெளிச்சத்துக்கு வந்தது.. அப்போது ஜீபா போலீசில் சொல்லும்போது, "என் கணவரை கொல்ல எத்தனையோ முறை முயற்சி செய்தேன்.. ஆனால், அவர் சாகவே இல்லை.. அதனால்தான் கூலிப்படை உதவியை நாடினோம்.. என் கணவன் எங்கெங்கே போகிறார், வருகிறார் என்று கூலிப்படைக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருந்தேன்..

 கம்பி எண்ணும் ஜோடி

கம்பி எண்ணும் ஜோடி

சம்பவத்தன்றும் அப்படித்தான் செய்தேன்.. அதனால்தான், கொலை செய்ய முடிந்தது.. அனைவரும் சேர்ந்துதான் இந்த கொலையை செய்தோம்" என்றார். இதையடுத்து, தர்யாகஞ்ச் பகுதியில் கொலைக்காக பயன்படுத்திய பைக்கை போலீசார் பறிமுதல் செய்ததுடன், கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.. இபபோது அந்த கள்ளக்காதல் ஜோடி கம்பி எண்ணி கொண்டிருக்கிறது... ஆக மொத்தம், மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கடைசிவரை தெரியாமலேயே கணவனின் உயிர் பரிதாபமாக பிரிந்துவிட்டது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+