"டோட்டலா நொறுங்கிடுச்சே".. பீஸ் பீஸா போன "தனி ஒருவன்" பிளான்.. எடப்பாடிக்கு இந்த நிலைமையா.. உண்மையா?

எடப்பாடி பழனிசாமி தனித்து விடப்பட்டாரா என்ற சந்தேகம் சேலத்தில் எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலம் பொருந்திய சேலம் மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமி தனித்து விடப்பட்டுவிட்டாரோ என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர்.. என்ன காரணம்?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, இவை இரண்டுமே தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அதிலும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மட்டும் கூடுதலாக விவாதங்களை சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டுள்ளது.. ஆனால், 2 அறிக்கைகள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து எந்தவித கருத்தையும் சொல்லாமல் உள்ளார்..

 டபுள் ரிப்போர்ட்கள்

டபுள் ரிப்போர்ட்கள்

இந்த 2 அறிக்கைகளில் எடப்பாடிக்கு அதிக சிக்கலை ஏற்படுத்தி உள்ளது தூத்துக்குடி சம்பவ அறிக்கைதான். பேரவையில் அறிக்கையை தாக்கல் செய்ய போவதாக முன்கூட்டியே தகவல் கசிந்ததால்தான், அன்றைய தினம் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை எடப்பாடி அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயம் தொடர்பாக மேலிடத்தை தொடர்பு கொண்டு பேசி, உதவியை நாடியதாகவும், ஆனால், இந்த விஷயத்திலும் தலைமை, எடப்பாடியை கைவிட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்தால் மட்டுமே, ஆதரவு சிக்னல் கிடைக்கும் என்பதையும் திட்டவட்டமாக சொல்லி விட்டதாக தெரிகிறது.

 லீகல் டீம்

லீகல் டீம்

இதனால், அப்செட்டில் உள்ள எடப்பாடி, தன்னுடைய லீகல் டீமுடன் சட்டரீதியான விஷயங்களை ஆலோசித்து வருகிறார்.. அதேபோல, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையில், எடப்பாடிக்கு பெரிதாக சிக்கல் இல்லை என்றாலும், தன்னுடைய ஆதரவாளர் விஜயபாஸ்கர் வசமாக சிக்கி உள்ளதால், இதை பற்றி பேச முடியாமல், சசிகலாவையும் வறுத்தெடுக்க முடியாமல் கையை பிசைந்து வருகிறாராம்.. ஓபிஎஸ், சசிகலாவை விமர்சனம் செய்தால் பதிலுக்கு அவர்கள் விஜயபாஸ்கரை இழுத்த வந்து விமர்சிப்பார்கள் என்பதால், கப்சிப் மோடுக்கு போய்விட்டதாக கூறப்படுகிறது.

 மாறும் குறியீடு

மாறும் குறியீடு

ஒருபக்கம், அருணாஜெகதீசன் அறிக்கை, மறுபக்கம் நெடுஞ்சாலைதுறை ஊழல், இதற்கு நடுவில், வேறுவிதமான வழக்குகள், விசாரணைகள் நெருக்கடியை தந்துவருகின்றன.. இவைகளில் இருந்து தப்பிக்கலாம் என்றால், பாஜகவின் அழுத்தங்களையும் ஏற்க விருப்பமில்லாமல் எடப்பாடி உள்ளதாக தெரிகிறது.. அதேசமயம் நடப்பதை எல்லாம் பார்த்து, எடப்பாடி பக்கம் உள்ள முக்கிய நிர்வாகிகளே லேசாக ஆட்டம் காண துவங்கி உள்ளார்களாம்.. இரட்டை இலையை மேலிடம் முடக்கிவிட்டால், தங்களது எதிர்கால அரசியலே கேள்விக்குறியாகிவிடும் என்பதால்தான், எடப்பாடிக்கு அவர்கள் அட்வைஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்களாம்..

 ப்ளான் A

ப்ளான் A

அதனாலேயே, ஓபிஎஸ்ஸையும் ஏற்றுக்கொள்ளும்படி அவரிடம் வலியுறுத்த தொடங்கி உள்ளார்களாம். இதுவரை தனக்கு பலமாக இருந்துவருவதே, தன் பக்கம் உள்ள 90 சதவீதத்துக்கு மேலான ஆதரவாளர்கள்தான்.. ஆனால், அப்படிப்பட்டவர்களும் அட்வைஸ் செய்ய துவங்கி உள்ளதையும், மேலும் சிலர் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமான தூது விடுத்து வருவதையும் கேள்விப்பட்டு, எடப்பாடி அதிர்ந்து போய்விட்டாராம்... இப்படிப்பட்ட சூழலில்தான் சேலத்தில் ஒரு சம்பவம் நடந்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வருகிறது.

 ப்ளான் B

ப்ளான் B

தீபாவளி பண்டிகைக்காக சேலம் வந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.. நேற்றைய தினம், ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போராடி உயிர் நீத்த மருது சகோதரர்களின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.. அந்தவகையில், தன் வீட்டின் வளாகத்திலே மருது சகோதரர்கள் உருவப் படத்தை அமைத்து அலங்கரித்து அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் எடப்பாடி.. இந்த நிகழ்ச்சியில் வேறு யாருமே கலந்து கொள்ளவில்லை.. கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் யாருமே இந்த நிகழ்ச்சியில் இல்லை.. தனி நபராய், அந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார் எடப்பாடி.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

 8 + 1 மிஸ்ஸிங்

8 + 1 மிஸ்ஸிங்

ஒருவேளை, எடப்பாடியின் வீடு என்பதாலேயே, அங்கு யாரும் இயல்பாக செல்ல முடியவில்லையா? அல்லது தீபாவளி பண்டிகை என்பதால், யாரும் எடப்பாடி வீட்டுக்கு செல்லவில்லையா? அல்லது எடப்பாடி மீதான கைது பயம் காரணமாக, அவரிடமிருந்து விலகி நிற்கிறார்களா? சேலம் நிர்வாகிகள்கூட இதில் பங்கேற்கவில்லையே ஏன்? என்ற சந்தேகங்களை சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர்.. காரணம், சேலம் மாவட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் 8 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் என அத்தனை பேரும் எடப்பாடிக்கு இத்தனை வருடமும் அரணாக இருந்து வருகிறார்கள்.. ஆனால், இவர்களில் ஒருத்தர்கூட நேற்றைய தின நிகழ்வில் கலந்து கொள்ளாததுதான், பெருத்த சந்தேகத்தையும், சங்கடத்தையும் எடப்பாடிக்கு ஏற்படுத்தி வருகிறதாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+